It கலைமகன் கவிதைகள்: செப்டம்பர் 2012

புதன், 26 செப்டம்பர், 2012

நானும் ஒரு முஸ்லிம்!


நான் நயந்த நல்ல கவிதை!
சுய விசாரணைக்கு உகந்தது. எனை நான் கேட்டுக்கொண்டேன். நீங்களுந்தான் கேளுங்களேன்! இந்த புதுச்சூடிகளில் உள்ள உண்மைத் தன்மையை எடுத்து சீர்பெறுங்கள்! தப்புக்கெல்லாம் ஆப்பு வைப்போம்!!
http://ashroffshihabdeen.blogspot.com/2012/09/blog-post_25.html?spref=fb



நானும் ஒரு முஸ்லிம்!



எப்போதும் நினைவிலிருத்திக் கொள்
நீ ஒரு முஸ்லிம்

ஒரு போதும் பொய் சொல்லக் கூடாது -
நீ ஒரு முஸ்லிம்

தொழுகையைத் தவற விடாதே -
நீ ஒரு முஸ்லிம்

நோன்பு பிடிக்காமல் இருந்து விடாதே -
நீ ஒரு முஸ்லிம்

ஸக்காத்தைக் கணக்குப் பார;த்துக் கொடுத்து விடு -
நீ ஒரு முஸ்லிம்

ஸதக்காக் கொடு -
நீ ஒரு முஸ்லிம்

வசதி வந்தால் ஹஜ்ஜை நிறைவேற்று -
நீ ஒரு முஸ்லிம்

தப்புகளுக்குத் துணை போகாதே -
நீ ஒரு முஸ்லிம்

மூத்தோரை மதித்து நட -
நீ ஒரு முஸ்லிம்

சிறியவர்களிடம் அன்பு காட்டு -
நீ  ஒரு முஸ்லிம்

வறியவர்க்குக் கட்டாயம் உதவி செய் -
நீ ஒரு முஸ்லிம்

பொதுவிடத்தில் கண்ணியமாக நடந்து கொள் -
நீ ஒரு முஸ்லிம்

ஒரு குழப்பவாதியாக இருந்து விடாதே -
நீ ஒரு முஸ்லிம்

வாகனம் செலுத்துகையில் ஒழுங்கைப் பின்பற்று -
நீ ஒரு முஸ்லிம்

விட்டுக் கொடு -
நீ ஒரு முஸ்லிம்

வீண் தர்க்கத்தையும் விதண்டாவாதத்தையும் தவிர் -
நீ ஒரு முஸ்லிம்

உனது நற்பண்புகளால் மற்றோரைக் கவர் -
நீ ஒரு முஸ்லிம்

யாரையும் அவமதிக்காதே -
நீ ஒரு முஸ்லிம்

நீயே பிரதானம் என்று பறைசாற்றாதே -
நீ ஒரு முஸ்லிம்

உன் சொல்லையே கேட்கவேண்டும் எனத் துள்ளாதே -
நீ ஒரு முஸ்லிம்

பொதுத் தளங்களில் மற்றவரைக் கவரக் கேனத்தனமாகப் பேசவோ நடக்கவோ முற்படாதே -
நீ ஒரு முஸ்லிம்

கோழையாக இராதே -
நீ ஒரு முஸ்லிம்

அபூபக்கரின் விசுவாசம் உன்னில் இருக்க வேண்டும் -
நீ ஒரு முஸ்லிம்

உதுமானின் உத்தமம் நீயாயிருக்க வேண்டும் -
நீ ஒரு முஸ்லிம்

உமரின் உருவிய வாளாக நீயிரு -
நீ ஒரு முஸ்லிம்

அலியின் ஆற்றல் உன்னில் தெரிய வேண்டும் -
நீ ஒரு முஸ்லிம்

நிறுவையில் நேர்மை செய் -
நீ ஒரு முஸ்லிம்

நயவஞ்சகனாக ஒரு போதும் இராதே -
நீ ஒரு முஸ்லிம்

பொதுச் சொத்தில் கை வைக்காதே -
நீ ஒரு முஸ்லிம்

பணிவு எப்போதும் உன்னில் படிந்திருக்க வேண்டும் -
நீ ஒரு முஸ்லிம்

அடக்கம் என்றும் உன்னை ஆட்கொள்ள வேண்டும் -
நீ ஒரு முஸ்லிம்

யார் மனதையும் நோகடிக்காதே -
நீ ஒரு முஸ்லிம்

எங்கும் எதிலும் கண்ணியமாக நடந்து கொள் -
நீ ஒரு முஸ்லிம்

நட்புக்காக, சொந்தத்துக்காகச் சார்பெடுக்காதே -
நீ ஒரு முஸ்லிம்

அளந்து பேசு, அநாவசியாமாய்ப் பேசாதே -
நீ ஒரு முஸ்லிம்

உனது தவறுகளை நியாயப்படுத்த இஸ்லாத்தில் ஆதாரம் தேடாதே -
நீ ஒரு முஸ்லிம்

உன்னால் தவறு நிகழின் பெருமனதுடன் ஏற்றுக்கொள்! -
நீ ஒரு முஸ்லிம்

கர்வமும் பெருமையும் உன்னைச் சேர விடாதே -
நீ ஒரு முஸ்லிம்

நீ எல்லாவற்றையும் புரிந்து கொள்வாய் -
நீ ஒரு முஸ்லிம்

ஒரு முக்கியமான விடயம் -
இவை எவற்றையும் நீ எனக்குத் திருப்பிச் சொல்ல எத்தனிக்காதே!

ஏனெனில்
நானும் ஒரு முஸ்லிம்!
 




ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

மனதெங்கும் ஒளிபடர....

மனதெங்கும் ஒளிபடர....

- கலைமகன் பைரூஸ் -

















பொய்மை எங்ஙனும் விரியவிரிய
பேதை மனங்க ளுயரும் இங்கு-
செய்கைகள் விசும்பன்னதாய் உயர உயர
சகந்தானும் புளகாங்கித மடையும்!

தன்னையே உயர்த்தித் தள்ளத்தள்ள
தனிமரமா யொதுங்கும் உள்ளம்
பெண்மையை மதித்து நடக்க நடக்க
பேராளனா யுலகில் உலவும்!

நன்மையே செய்யச் செய்ய
நாவிலினிமை யூறும் வெறும்
புன்னகையே உதிர்க்க வுதிர்க்க
பொலிவிழந்த உளம் நோகும்!

ஏழ்மைக்கு கைகொடுக்க கொடுக்க
ஏற்றந்தா னுண்டாகும் இங்கு-
பாழ்பட்ட மனங்களில் கருமை நீங்க நீங்க
பகலவ னொளியாய் உள்ள மொளிரும்!

நற்றமிழினை யேற்ற ஏற்ற நிலம்
நனிசிறந்தே உயரும் காலம்
உற்றதுணையை நெருங்க நெருங்க
உண்மையை உலகினுக் கோதும்!

மறையிறையை ஏற்ற ஏற்ற
மனதெங்கும் ஒளிபடரும் நிதம்
கறைநீங்கி வாழ வாழ மனிதம்
ககனமீதெங்கும் ஒளிர்ந்தே செல்லும்!

நன்றி  தினகரன் வாரமஞ்சரி 2012/09/23
http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/09/23/?fn=d1209231

புதன், 19 செப்டம்பர், 2012

இழிசெயலை இழிந்துரைத்தேன்!

வானும் புவியும் இன்னும் பிறவும்
வடிவாம் தூதரும் மலாயிக்காமாரும்
மீனும் இரவியும் நிலாவும் நீள்
மண்டலத் தேகும் எண்ணிலாதனவும்
மீனென மின்னும் நம்மவர் தூதர்
மகிமைமிகு முஹம்மத் என்பவர்க்காய்
குன்னெனும் சொல்லினால் ஏதும்செயும்
குப்ரை விரும்பா ஏகனவன் படைத்தான்!

படைத்த நீள்புவியினில் முஹம்மதரை
படைப்பில் உயர்ந்தவர் என்றான் இறைவன்
மடைமை மண்டிய மாநிலமீது மாநபி
மாமனிதராய் உதித்திட்டவேளை - புவி
காடையர் செயலொடு விஞ்சியே நின்றது
கருத்தினிற் கொண்ட வள்ளல் முஹம்மது
விடையென நல்லவை நாளும் செப்பி
வல்லான் தூதர் தானெனச் செப்பி நின்றாரே!

குவலயம் போற்றிடும் நல்லவர் எங்கள்
குணக்குன்றாம் முஹம்மது நன்னபிமீது
பாவம் செய்திட்ட பாமரன் செயலினைக்கடிந்து
பாவெழுதிடத் துணிந்தனன் அறியாத்தமிழில்..
தேவலை விட்டுடுவம் என்று விட்டகழ
தவறை உணர்ந்தே செய்திடும் இவன்தவறுயரும்!

குறையிலா நபியில் குறைகள் கண்டிட
கேடுகெட்டான் டெர்ரி ஜோன்ஸ் என்பான்
மறுவிலா நபியின் நாமம் கெடுத்திட
மறுவுடன் தந்தான் திரைப்படம்தானே
கூறுகூறாய் அவனைக் கிழித்து இழிந்த
கடல்தரு வுப்பில் பிசைந்திட நினைக்குதுளம்
பேறாம் நபியை இழிந்ததுடன் மேலும்
பிழையிலை என்றனன் அழிந்தொழிந்துபோக...

உத்தம நபினை இழிந்திடும் படத்தினை
உளம்தெரிந்தும் பார்ப்பவன் அழிந்தனன்
நித்தமும் நேசித்திடும் நல்லார்நபியின்
நேயம்மிக்கார் கிளம்பிடுக அவனை வைதிட
மொத்தமும் இழிவே தந்திடும் படத்தினை
மனுக்குலம் எதிர்க்கணும் - தீப்பொறிபறக்கணும்!
வித்தகன் தானென செய்திடும் அராஜகம்
வித்தைகற்றோர் மற்றோர் தெரியணும்

பொல்லாதவனின் கொடுஞ்செயல் தகர்த்திட
பெருமைநபியின் உம்மத் நாமெலா மென்றாய்
நில்லாத நிலமீது நயவஞ்சன் செயலலழிந்திட
நிலத்தே துன்பம் பலவாய் அவனுள் வந்திட
பொல்லாநோயும் அவனுள் குடிகொள
புவியி்ல் ஏந்துவம் எங்கள் கரங்களை மேலாய்!
சொல்லும் செயலும் நலமே எங்களென்பார்
சொல்லுக இறையிடம் இவனை யழித்திடவே!

நெஞ்சம் வெடிக்குது உளமும் எரியுதுதீயாயெனது
நானிலமீது நல்லார்நபிக்கு செய்ததுரோகமதுஎண்ணி
தஞ்சம் புகுந்திட நினைப்பா னெங்கும் - இறையே
தரணியி லிழிந்தவன் இவனெனக் காட்டு மேலாய்நீ
விஞ்சிடும் தனத்தை வீணாய்வீசி கெட்டானிவன்
விந்தைநபியின் பேரினை யழித்திடச் செய்தனன்
மஞ்சையும் பஞ்சாய் ஆக்கிடும் வல்லானே நீ
மண்ணிலிவனை இழிந்தவனெனக்காட்டு சீராய்!

கரியாமெனப் பிளிரும் தீயரக்கர்கள் அருகே
கரியாவர் தீப்பொறி யொன்று பட்டக்கால்
நரிகள் எலாம் ஒன்றிணைந்து ஊளையிட்டாலும்
நாயகத்தின் நற்குணந்தான் நீங்கிடுமாபாரில்
பேரிறையின் சினம் இன்னும் காணார்புவியில்
போதையால் நிலைதடுமாறுகிறார் அந்தோபாவம்!
குறையிலா நபியில் குற்றம் சேர்த்தவன் கதியில்
குடர்பீய்ந்து மொழியிழந்து போவனே பார்கதியில்!

உளத்தில் நபியின் உண்மைக்காதல் இருப்பாரெவரும்
உண்மைநபியின் உன்னபேருக் கிழிவைச் செய்தவன்க்கு
விளங்காதிருப்பினும் எதிர்ப்பினைக் காட்டிடுகவின்று
வேதமிஸ்லாம் பேருடை உமக்கு நல்லனவாகுமின்று
குளத்து நீரெலாம் குடித்திட முனைந்திடும் மாபாவி
குவலயத்து இழிந்தே யழிந்திட துஆவிரந்திடுகவின்று
நாளும் நல்லன நடக்குமுமக்கு இவன்க்காய் சீறிட
நாயன் நல்லருள் கிட்டும் உமக்கும்!
-இஸ்மாயில் எம். பைரூஸ்


--------------------------------
தடைசெய்! தடை செய்!!
யூரியுப்பே நீ தடைசெய்!!
இறைவன் சாபம் வந்திட முன்னர்
இந்த யூரியுப்பைத் தடை செய்!!

வியாழன், 6 செப்டம்பர், 2012

கவி தந்த சோதரன்


 சகோதரன் கலைமகன் பைரூஸ் அவர்களின் பார்வையில் நான்----

அழிவதூஉம் மாறுவதூஉம் யாக்கை- பயனில
நட்டார்கண் ஒட்டுதலே திரு

சிற்றுடல்க்கு ஊங்கு முள்ளம், சிறுமைதான்
அன்புடை உள்ளம் உயரும்

அரிவை அறியவை போற்றுதல் அழகு
அறியாயின் பேதை எனல்

சிறுமை இளமை மூப்பு மூன்றின்கண்
வனப்பு நோக்க லிழுக்கு

போற்றினும் போற்றுக நல்லுளமே என்றும்
அழகினை நோக்கினின் அழிவு

ஜன்மத்திலேது பயன் அழகினையே உன்னின்
சிறுமைக் குணமல்லோ அறி

வேறு

அறிவிலுயர்ந்தவளாய் நல்லறிவு தருபவளாய்
அஞ்ஞானம் களைபவளாய் ஆதரவு தருபவளாய்
இறைமறை தனை நெஞ்சத்தி லேந்தியவளாய்
இன்னலூடும் இன்முகத்திலிருப்பவள் ஜன்ஸி

இளமை யின்பம் ஏதென்பவளாய் - இளசாய்
இதமாய் உளத்தை பேணியிருப்பவளாய்
கிழடு வந்தாலும் கூட பாசத்தின் உறைவிடமாய்
கிஞ்சித்தும் பெருமை யிளாதாள் ஜன்ஸி!

கிள்ளைமொழி தருபவளாய்- சீராய்ப்
பருவ மாறு கடந்தவளாய் ஆனாலும்
இல்லாத பேறுக்காய் ஏங்கமறுப்பவளாய்
இம்மையில் இனிதிருப்பவள் ஜன்ஸி!

சகோதரியாய் அன்பான சகியாய் - அக்காளாய்
சலனமிலாது வலம்வரும் இவள்க்கு வயதேது
விகாரமிலை உண்மை யன்பீதில் சொன்னேன்
விந்தை இவளுன்மை கண்டிடின் எலோரும்!

எல்லாமுந் தருபனை தந்திடு மூரினில்சீராய்
எழுத்தகரம் முதற்கொண்டு கற்றிட்டாள்
நிலையிலா பாரினை உன்னி தேவையதும்
தேவையிலை என தெம்மாங்குப் பாட்டிசைப்பாள்!

ஜன்ஸி இவள் ஜன்ஸிராணியின் வீரத்திற்றான்......
ஜன்ஸி இவள் இலக்கியராணிதான் தகைமிகு
ஜன்ஸி இவள் உருகண்டு உறவிலை எம்மில்
ஜன்ஸியின் உரு எவ்வாறிருந்திட்ட போதும்........

பேதையரை வழுத்தும் போதையிவன் என்பரோ
பேரே யழிந்திடினும் உண்மைக்கு கரம் நீளும்
நீதமாய் நல்ல படையல்கள் பல தரும்
பத்தினித் தமிழின் நல்லாளிவளை படிப்பேனே!

- தமிழன்புடன் சகோதரன் கலைமகன் பைரூஸ்
2012.09.05


(இன்று இந்திய ஆசிரியர் தினம் - ஆசிரியை எனும் தகையுடையாள் இவள்க்கு வாழ்த்துக்களுமுண்டு)

தமிழ்மொழியில் புலமை நெய்த
அழகுக் கவியின் ஆளுகையே!
உங்கள் கவி வார்த்தை கண்டு
புளாங்கிதத்தி லென் மனமின்று! - இவள் .....ஜன்ஸி
Posted by Jancy Caffoor at Wednesday, September 05, 2012

http://kavithaini.blogspot.com/2012/09/blog-post_5662.html

சனி, 1 செப்டம்பர், 2012

வண்டமிழின் செல்வா!



வண்ணத் தமிழ்மொழி வெற்றி(க்) கலைப்புலி
நட்டும் ஜின்னாஹ்வே!
வாகைசூடி வென்று வளந்தரு
வண்டமி ழின்செல்வா!
மண்ணுத் திசையெலா(ம்) பாவி லடங்கிட
கவிதரு புலவீரே!
இன்பம் தந்திட நற்றமிழ் மலர்ந்திட
இயற்றமிழ் தந்திடு தலைவா!
எண்ணில் பல்கலை கற்றுப் புவியினின்
வாழ்ந்திடு பொன்னே!
எந்தைத் தமிழிது விந்தை செய்திடு
என்றிடு கவியரசே!
புண்ணில் நற்றமிழ் வளமாய் வாழ்ந்திட
புதியன படைப்போனே!
புவியில் நல்வினை செய்திடு புலவோய்
புகழொடு வாழ்கவே!

வாழ்த்து மடியேன்
கலைமகன் பைரூஸ்
2012 - 09 - 01

(அகவை அறுபத்தாறில்
அன்னைத் தமிழ்க்காவலன்
ஜின்னாஹ் சரிபுத்தீன்
(1943 செப்டெம்பர் 01  - 2012 செப்டெம்பர் 01)) அவருக்காய் இக்கவிதை