It கலைமகன் கவிதைகள்: நவம்பர் 2012

வெள்ளி, 30 நவம்பர், 2012

வியாழன், 29 நவம்பர், 2012

මල් මල් මල් - ළමා ගීත

මල් මල් මල් - ළමා ගීත
---------------------------

මල් මල් මල් ලස්සන මල්
රෝස මල් පිච්ච මල් සුව‍ද හමන මල්//

පාට පාට මල් - පාට පාට මල්
පුංචි දරැවන් අපි ආස කරන මල්

புதன், 28 நவம்பர், 2012

வலிக்கிறது எனக்கும்தான் மகளே!

 கவிதாயினி ஜன்ஸி கபூரின் 'வலிக்கிறது அப்பா!' கவிதைக்கான பதில் கவிதை....


வலிக்கிறது எனக்கும்தான் மகளே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மகளே...........................!

யாழினிலும் குழலினிலும்
அழகிய நாமம்தான்......

ஏன்மகளே....... குத்திக்காட்டுகிறாய்
தப்புமகளே.....
உனது விரக்திக்கு
நான்தான் காரணமா?

அண்டம் பிளக்கும் அணுவைவிட
அபாண்டமாய் நான் வார்த்தைகளை
உதிர்கின்றேனா?
பூச்சியங்கள் போட்டுப் பெரிதாக்கும்
உன்தாயின் உச்சரிப்புக்கள்
நீ கேட்டும்
ஆணாதிக்க வெறி என்கிறாய் என்னில்....!

உண்மைதான்
நீ சொல்வது......
எங்களால்........
உன் வாழ்வு பொய்த்துப்போனது
உண்மைதான்.....!

செவ்வாய், 27 நவம்பர், 2012

ஓர் இரவின் கிறுக்கல்கள்!





(1)
என்லெப்டொப்பில் உனைக்கண்டு
நீபோலும் பசளையானேன் நான்!
உன் மூச்சுக்காற்றில்
என் உயிர்க்காற்று
விரைந்தெழுகிறது
மெய்க்காதல் இதுவென்று!

ஸ்பரிசமில்லாத
லெப்டொப் தொடுகை மட்டுமேகொண்ட
என் கரங்கள்
உன் சிவந்த 'லிப்ஸ்' கண்டு
சுவைத்துக்கொள்கிறது
அருகில் நீயென்று!

ஞாயிறு, 25 நவம்பர், 2012

மானங்கெட்ட மனிதன் உனைப் போலுண்டா பாரில்?

மானங்கெட்ட மனிதன்
உனைப் போலுண்டா பாரில்?
-கலைமகன் பைரூஸ்

எல்லாமும் தமதாக்கி எண்ணெய்வளங்கொண்டு
ஏற்றமிலாக் காரியங்கள் தாம்புரியும்
எட்டப்பர் காரியங்கள் தாம்புரியும்
மத்தியகிழக்குத் தனவான்களே!
அறாபியன் எனும் பெயர்தரித்த கூனனே!

சனி, 24 நவம்பர், 2012

கூழாங்கற்கள் எரிகற்களாக முன்...!

Monday, November 19, 2012



ஏ எகூதிகளே!
சிறுவர் நாம் உமக்குச்செய்த
கொடுமைகள் தான் என்ன?
உணவைத் தட்டிப் பறித்தோமா
இல்லை
உம் உணவில் மண்ணைவாரி
நாம் போட்டோமா?
என்ன கொடுமை நாம்செய்தோம்?
இப்படி  நாய்களைக் கொல்வதுபோல்
எங்களைக் கொன்று குவிக்கிறாய்நீ?
எமது மண்ணில் உள்ள

புதன், 14 நவம்பர், 2012

ஒரு மரணம் அழுகிறது!


ஒரு மரணம் அழுகிறது!
------கலைமகன் பைரூஸ்

பல்லாயிரம் ஆசைகளைச் சுமந்து
பவனிவந்தேன் பாரில்நான்!
எல்லோரும் செயும் நல்லவையும்
தீயவையும் செய்திருப்பேன்!
என்றாலும்
சுவனத்தில் ஈடேறவே
உலகில் பலசெய்தேன்!
இன்று
எனது உள்ளத்து வேதனைகள்
பற்றி
கடலளவு நான் கத்திக்கத்தி
குரல்ஓயுமட்டும் சொன்னாலும்
யாருக்கும் கேட்கப்போவதில்லை!

எனது மறுவாழ்வு
எப்படியோ என்று
நான் பெருமூச்சு விடுகிறேன்
என்றாலும்
என்னை
மண்ணறைக்குள் வைப்பதில்
எல்லோரும்
குறியாய் இருப்பதை
நான் காண்கிறேன்...
அவர்களுக்கு
என் அவலங்களும் புரிவதில்லை
அவர்கள்பற்றி நான்தெரிவதும்
புரிவதில்லை.

என்னை எப்படிக் குளிப்பாட்டுவது?
என்று ஒருசிலர் பேசுகிறார்கள்....
என் கைகளை எப்படிக்கட்டிவைப்பது?
நீட்டி வைப்பதா?
கட்டிவைப்பதா
என்றும் பேசிக்கொள்கிறார்கள்...
நானோ கட்டுண்டு கிடக்கிறேன்
என்கதி ஏதோ என்றநிலையில் நான்!

நான் நிலத்திலிருந்து
போகப்போவதற்காக
சிலர்
நீலிக் கண்ணீர்வடிப்பது தெரிகிறது....

என் குரல்  ஓய்ந்த்துகேட்டு
சில ஊரவர்,
அவன் அந்த சாதி,
அவன் அந்தப் பிரதேசம்
அவனைப் பார்த்து நமக்கு
என்ன  ஆவதாம்....
என்று முணுமுணுப்பதும்
எனக்குக் கேட்கிறது...

எல்லாவற்றிலும் மேலாக
இப்போது
என்னை மண்ணறையில் வைக்க
என்னோடு அடக்க்க்கூடிய
பாயில்வைத்து
கூட்டில் வைக்கிறார்கள்....
சிலர்.....
ஆம்.... நான் அன்புபரிமாறியவர்கள்
என்னில்  காதல் கொண்டவர்கள்
அழுகிறார்கள்!
சிலர் மண்ணறைவரை!
சிலர் அழுகை ஓயும்வரை!

சிலர் மாறி மாறி எனைச்சுமக்க
ஒருசிலர் இறைதுதி பாடிச்செல்ல
சிலர் மௌனித்துச்செல்கிறார்கள்!
நான் ஒன்றும் புரியாமல்
தலை கால்தெரியாமல் துவள்கிறேன்...

ஆளுக்கு ஆள்
துவேச வார்த்தைகளை
அள்ளித் தள்ளிக்கொண்டுசெல்கிறார்கள்
அடுத்தவன் காதுகளுக்குள் கேட்காமல்....

நான் எனக்குள்  இப்படிச் சொல்கிறேன்...
ஏ!
சாதித்துவம் – பிரதேசவாதம் பார்ப்பவர்களே
ஏ!
குழுவாய் நின்று மாற்றார்க்கு குழிபறிப்பவர்களே
நீங்கள் செய்வது எல்லாம்
நியாயமானது என்று கருதுகிறீர்களா?
உங்கள்
துவேசங்கள்
உங்கள்  ஆணவங்கள்
உங்கள்  அடாவடித்தனங்கள்
நாங்கள்தான் நல்லவர்கள்
நாங்கள்தான் வல்லவர்கள் என்றநிலை
என்னைப்போல் உங்கள் உயிர்க்காற்று
ஓய்ந்த்தும் உங்களுக்கும்தெரியும்!


நான்
மரணத்தைச் சுவைத்துவிட்டேன்
அதன் வலியும் – அதன்நெளிவும்
எனக்குத் தெரியும்
உங்கள்
அறியாமையை நினைத்து
எனக்குள் அழுகிறேன்....
நீங்களும் அழுகிறீர்கள்....
நானோ
கடலளவு கரைகிறேன்....

ஏ! இறைவா!
உத்தம்மான படைப்பாக நீ
எங்களைப் படைத்தாய்
நாங்கள் எங்களை மறந்து
எத்தனை தவறுகள் இழைத்தோம்!
உன்னிடம் அழுதுகேட்கிறேன்....
எல்லோரும் ஒன்றாக வாழ்ந்திட நீ
எண்ணிடு!
சாதித்துவ அரக்கர்களை அழித்திடு!
அப்போது
பிணமாய் உள்ள எம்காதுகளில்
அந்த
முணுமுணுப்புக்கள் எழாது!
உண்மை வழியை
உத்தம வழியை காண்பித்திடு!
எல்லோரும் இன்புற்றிருக்க....
எல்லோரும் இன்பமாய் உன்னருகில்வந்திட.....!

2012/11/14 இரவு 10.00 மணி 

கருத்துரைகள்:
-----------------------

ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா 
"என்னை எப்படிக் குளிப்பாட்டுவது?
என்று ஒருசிலர் பேசுகிறார்கள்....
என் கைகளை எப்படிக்கட்டிவைப்பது?
நீட்டி வைப்பதா?
கட்டிவைப்பதா

என்றும் பேசிக்கொள்கிறார்கள்...
நானோ கட்டுண்டு கிடக்கிறேன்
என்கதி ஏதோ என்றநிலையில் நான்!..."

****** "ஒரு மரணம் அழுகிறது" அற்புதமான ஒரு அனுபவம்.. இதனை ஒரு உருவகக் கவிதை என்று சொல்லாமா?? வாழ்த்துக்கள்!!
2012/11/14
பைஸால் இஸ்மாயில்  
கவி வரி அல்ல இது மனிதனின் இறுதி வரி !
நன்றி மக்கள் நண்பன் ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா 2012/11/14
Vetha ELangathilakam 
Nalvaalthu.....
  • Suraiya Buhary என்ன சொல்வது என்றே புரியவில்லை சகோதரா..அருமையான படைப்பு. எல்லோர் மனதிலும் மரண பயத்தை ஏற்படுத்தும் உங்கள் வரிகள்... நமக்கு நிகழப்போகும் நிகழ்வை எல்லோருக்கும் புரியும் விதமாக அருமையாக கொண்டு வந்தீர்கள்....வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்... 2012/11/15
  • Kandar Selvarathnam · Friends with Vathiri C Raveendran
    Life is precious. Breath gives you life & when it deserts us we are dead bodies. Consciousness gone for good. Learn the miracle of breath and reach almighty through Dhyanam (spiritual Knowledge practice) then only u can avoid rebirth onthis planet again and again.
    7 hours ago · 2012/11/15

  • மச்சானின் இறப்பு
    .....மாபெரும் போதனை

    அச்சாகப் பதிந்து
    ..... அச்சமாய் ஆனதே
    முடிவாகும் நாளில்
    ....முடிவைக் கண்டேனே
    முடிவாக நானே
    .....முடிவு செய்தேனே
    கலிமாவைச் சொல்லி
    .....கடைசி மூச்சுபோக
    சலியாமல் நாவும்
    ....சதாவும் ஓதவேண்டும்
    அசைவுகள் எல்லாம்
    .....ஆன்மாவில் அடங்கும்
    அசைவிலாத் தோற்றம்
    ....அங்கேதான் கிடக்கும்
    அகத்தின் ஒளியே
    ....அழகாய் மிளிர
    முகத்தின் சிரிப்பில்
    .....முழுதாய் உணர்ந்தேன்
    ஓடி உழைப்பதும்
    ....ஓரதிர்வில் ஓயும்
    ஆடி அடங்கிடும்
    ...ஆறடியில் சாயும்
    மரணம் பயமன்று
    ...மறுமையின் பயணமென்று
    வரணும் விசுவாசம்
    ....வளரணும் சுயமுயற்சி
    நன்மைகள் செய்தாலே
    .....நல்லவர்கள் வழுத்தும்
    தன்மையில் கைகூடும்
    ...தன்னிறுதிப் பயணம்

    அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

    “கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
    அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
    வலைப்பூந் தோட்டம்:http://www.kalaamkathir.blogspot.com/(கவிதைச்சோலை)
    மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com


    kalaamkathir.blogspot.com
    ‎"வலைப்பூவில் உங்கள் வருகைப் பதிவு நிலைப்பெற்ற நட்பின் நிகழ்வு."

  • Prahasakkavi Anwer nitharsanam intha kavithaiyinai pdikkum pothu naan eluthiya oru kavithai ean ninaivuku varukirathu ithayam iruki kankal pthingki edukalkalil ne sappaniyakum pozuthukalil vedo power konda vengkai eana un nadiththudippu uraikirathe......