It கலைமகன் கவிதைகள்: செப்டம்பர் 2013

சனி, 28 செப்டம்பர், 2013

என்னை அழவிடு நீ!

வேண்டாம் இதயத்தைக் கனக்கச் செய்ய
நீ உன் பாட்டில் இரு!
தனிமையில் துன்பந்தாங்க
என்னால் இயலும்....

விழிகளில் கண்ணீர் வழிந்தோட
என்னை அழ விடு...
அந்தக் கண்ணீரை துடைக்க
வேண்டவே வேண்டாம்
உன்பாட்டில் நீ இரு...

தீ மூட்டிய இதயத்தை
நிம்மதியாக்க
என்னை நானே வறுத்திக் கொள்ள
ஏதேனும் எனக்குச் சொல்....

கண்ணீர் முத்துக்களை ஒன்றிணைக்க

திங்கள், 23 செப்டம்பர், 2013

உனை நினைத்து இக்கணமும் இயற்றுகிறேன் பா!



வாழ்வில் பாரிய மாற்றங்கள் நிகழலாம்...
வசந்தம் கூட வழிநெடிகிலும் வரலாம்.....
என்றாலும்,
அடிமனதில் ஆழவேரூன்றி
அடையமுடியாமல் இருந்த அன்புக்காய்
அழுது கொண்டிருக்கும் உள்ளம்....

எப்படிச் சொல்ல என்று
உள்ளம் 
எடுப்பார் கைப்பிள்ளை போலும்
வேடிக்கை பார்த்ததால்...

புதன், 18 செப்டம்பர், 2013

டிசம்பரில் வரவுள்ளது 'கவிதா'...... ஆக்கங்களை உடன் அனுப்புங்கள்...!



வாசகர் கவனத்திற்கு...
--------------------------------
'கவிதா'வின் வரவை நிச்சயிப்பதற்காக சந்தாதாரராக இணைந்துகொள்ளுங்கள்.. ஆகக் குறைந்த கட்டணம் இலங்கை: ரூபா 1000/- தனிப்பிரதி இலங்கை: ரூபா : 100 (தபால் செலவுட்பட)
காசுக் கட்டளை அனுப்புவோர், பெறுபவர்: M I M FAIROOZ, பெறும் தபாலகம்: WELIGAMA POST OFFICE எனவும் குறிக்கவும்.

காசுக்கட்டளை மற்றும் பணவரைபுகள் கிடைக்கப்பெறும் வேளை, அவை பற்றி முகநூல் வாயிலாக அறிவிக்கப்படும்....

அனைத்துத் தொடர்புகளுக்கும் இலங்கை நேரம் மதியம் 4 மணியின்

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

வாதம் மிக்க பிரதேச வாதம் எதற்கு?

வாதம் மிக்க பிரதேச வாதம் எதற்கு?
--------------------------------------------------
-கவித்தீபம் கலைமகன் பைரூஸ்
நாங்கள் முஸ்லிம் ஒன்றே நாங்கள்
நலமாய் ஒற்றுமை கயிற்றினை பற்றுமின்
தீங்குகள் பலவாய் வந்திட்ட போதும்
தீயன நினைக்கா திருங்கள் என்றனர்....

திங்கள், 2 செப்டம்பர், 2013

'கலைமகன் கவிதைகள்' (நிழலும் நிதர்சனமும்) கவிதைத் தொகுப்புக்கு முஸ்லிம் கல்வி ஸ்தாபனத் தலைவர் எஸ்.எச். மௌலானாவின் கருத்துரை

சமுதாய உறுத்தல்களால் உருவானதே ‘கலைமகன் கவிதைகள்’
- முஸ்லிம் கல்வி ஸ்தாபனத் தலைவர் 

கலைமகன் பைரூஸின் படிக்குந்தோறும் இனிமை பயத்திடும், சலசலவென்ற ஓசைநயம் மிக்க ‘கலைமகன் கவிதைகள்’ கவிதைத் தொகுப்புக்கு கருத்துரை வழங்குவதில் முஸ்லிம் கல்வி ஸ்தாபனத் தலைவர் என்ற வகையில் பேருவகை அடைகின்றேன்.

இதயம் கனக்கின்ற பொழுதுதான் கவிதைகள் வருகின்றன.

‘எப்போதும் வருவதில்லை கவிதை

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

'கலைமகன் கவிதைகள்' (நிழலும் நிதர்சனமும்) கவிதைத் தொகுப்புக்கு பன்னூலாசிரியர் கலைவாதி கலீலின் அணிந்துரை

கவியிலக்கணங்களுடன் கூடிய கலைமகன் கவிதைகள்
முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல்

கவிதை என்பது வட்டமிட்டுச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி போன்றது. வண்ணத்துப் பூச்சியின் சுயாதீனப் போக்கும் அதன் வேகமும் விறுவிறுப்பும் வித்தியாசமான அசைவுகளும் அழகும் மெலிதான நறுமணமும் நமது மனம் கொள்ளத்தக்கன.

கவிதையின் வடிவம் பற்றிய என் கணிப்பீடு இதுதான். கவிதையின் வடிவம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று சில வரையறைகள் உள. அவை அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை என்பனவாம். இவை