It கலைமகன் கவிதைகள்: ஜூன் 2013

ஞாயிறு, 23 ஜூன், 2013

மழை - 'கவித்தீபம்' இஸ்மாயில் எம். பைரூஸ்


மழை
=====
சிங்களத்தில்: மஹகம சேக்கர
தமிழில்: 'கவித்தீபம்' இஸ்மாயில் எம். பைரூஸ்
=====================================
சுழல்காற்று செடிகொடிகள் வீசி
மின்னல் ஒளி பாய்ச்சி
பாரியதொரு மழைமேகம்
சற்றும் எதிர்பாராமலேயே
மழைநீரைச் சிந்தியது!

காலத்திற்குக் காலம்
தலைமுறைக்குத் தலைமுறையாக
உலகம் தோன்றிய நாள்தொட்டு
இதுவரை இலட்சக்கணக்கான
காதலர்கள் வீழ்த்திய
சுட்டெரிக்கும் கண்ணீர்த் துளிகளால்
மழைத்துளி உருவெடுத்ததாய்
எனக்குள் தோன்றியது!

2013/06/22

வெள்ளி, 21 ஜூன், 2013

மண்ணறையில் மலர்ந்த மலர் - 'கவித்தீபம்' பைரூஸ்


நேற்றிரவு தூக்கத்தில் இறந்துபோன நான்
கிழிந்த புடைவையினால் மூடிக்கொண்டு
மரணத்தை கையிலேந்திக் கொண்டுபோய்
எனது கைகளினால் மண்ணறையில்  புதைத்தேன்.

திங்கள், 17 ஜூன், 2013

அப்பாவின் உழைப்புக்கு நிகர் யாரப்பா?



தன் எண்ணத்து ஆசைகளை
தாரத்தில் ஆனந்தம் துள்ளியெழ
தனக்கே யுரித்தான நிலத்தினிலே
விதைத்து ஆகின்றான் தாதை!

வலியென்றும் பாராது நீள்நிலத்தில்
வந்திட்ட சிறுமுளைகள் செழித்திடவே
உழைத் துழைத்து வியர்நீர்சிந்தி
ஊதியமில்லாமல் செய்கின்றான் பணி!

திங்கள், 10 ஜூன், 2013

'கவித்தீபம்' பட்டத்துடன் காரணகர்த்தாக்களை நினைத்துப் பார்க்கிறேன்...!

தடாகம் கலை இலக்கிய வட்டம் சர்வதேச ரீதியில் நடாத்திய 'திறந்த (2013 மே மாதக்) கவிதைப் போட்டியில், எனது கவிதை (காசேதான் பேறாமோ?) சிறப்புக் கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

சிறந்த கவிதைக்காக தடாகம் வழங்கும் 'கவித்தீபம்' பட்டமும் கௌரவமும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. (இது எனது வாழ்வில் கிடைத்த முதல் பட்டம் என்பதால் பெருமகிழ்வு எனக்கு.)

கவிஞர்களையும், கவிதைகளையும் புடம்போட்டு,