It கலைமகன் கவிதைகள்: அக்டோபர் 2013

வெள்ளி, 25 அக்டோபர், 2013

கரங்கொடுப்பார் ஆருளரோ?

உள்ளத்து வேதனைகள் தீப்பிழம்பாக
உயரிய சாதிக்கொடுமைகள் குழம்பாக
எள்ளளவும் மதியாதார் பாந்தளாக
ஏதுசெய்வம் எனவழிகிறது நீரருவி!

கருவினில் சுமப்பவள் அலைதுரும்பாகி
களங்கத்திற்குள் சிக்குண்ட மதியாகி
உருமுவாரின் வன்கொடுமைக் காளாகி
உயர்வுகாணுதற்காய் வழிகிறதுபேராறு!

செவ்வாய், 22 அக்டோபர், 2013

அழவே மாட்டேன் நானா நான்! - 'கவித்தீபம்' கலைமகன் பைரூஸ்

சீதனம் பற்றி உள்மனதில்
சீர்தூக்கி சோர்ந்துபோகும் – நானா
செத்த பொணம் மாப்பிளைங்க
சத்தியமாய் வேணாமுங்க – அழமாட்டேன்!

மறைநபியின் வாக்கையெல்லாம்
மண்ணில் உதறிவிடும் மனுசனுங்க
நறைவிழுந்து கூன் வந்திடினும் – வேணாமுங்க
நானா கவலைவிடுங்க – அழமாட்டேன்...

செவ்வாய், 15 அக்டோபர், 2013

தியாகத் திருநாள் வாழ்த்துகள்!

தனயன் தன்னை தயாளனுக்காய் – நபி
தந்திட முனைந்த நந்நாள் இந்நாள்
பண்ணுவோம் அவர்வழி நல்லன நாம்
பாரினில் களைவோம் தீய சிந்தைதான்!

இறையின் கடமை வந்தது நம்மவர்
இறையில்லம்  ஏகினர் புனிதம் பெற்றிட
மறையிறையின் முன் மண்டியிட்டு பாவம்
மறைந்தழித்து வருவோரையும் ஏத்துவோம்..!

ஹஜ்ஜினின் அறுத்திடுவோம் நாமும் உள்

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

என்பாகத்தை எனக்கு வைத்துவிடு! (மொழிபெயர்ப்புக் கவிதை)

கள்ளமாய் ரகசியமாய் அருகேவந்து சொன்ன
கதையை மீண்டும் கட்டுங்கள்...
பாழடைந்த நாளொன்று நாங்கள் தனியாக நின்ற
இடத்திற்குப் போய் உட்காருங்கள்...
யார்? எதற்கு? ஏன்? இங்கே இன்று...?
எனக் கேட்டால் பொய் சொல்லுங்கள்...
எக்காரணம்  கொண்டும் போகாமல் நான்
வரும்வரை காத்திருங்கள்...

செவ்வாய், 8 அக்டோபர், 2013

தினகரன் வாரமஞ்சரியில் வெளியான 'நிழலும் நிதர்சனமும்'பற்றிய நயவுரை

சென்ற ஞாயிற்றுக்கிழமை (06/10/2013) தினகரன் வாரமஞ்சரியில், இலங்கையின் பிரபல ஆங்கில - தமிழ் திறனாய்வாளரும், பத்தியெழுத்தாளருமான உயர்திரு. கே.எஸ். சிவகுமாரன் ஐயா அவர்கள் எனது 'நிழலும் நிதர்சனமும்' கவிதைத் தொகுப்பைப் படித்து நயவுரை எழுதியிருந்தார்.

எனை விஞ்சிப் போற்றி, என் தமிழில் நான்

திங்கள், 7 அக்டோபர், 2013

THE LIFE OF THE PROPHET MUHAMMED! Khulafa-Ur-Rashideen (Poems)

நான் பணிபுரியும் வெலிகம ஸலாஹியா சர்வதேசப் பாடசாலையின் கணக்காளர் திரு. முஹம்மது முஜீப் ஆங்கிலத்தில் (இஸ்லாம் சார்ந்த) இரண்டு கவிதைகளை எழுதியிருந்தார்.

நல்ல ஆற்றொழுக்குடன் கூடிய அந்த இரண்டு கவிதைகளையும் நான் என் தளத்தில் பதிவேற்றி அவருக்கு கொலுகொம்பாக நிற்க விரும்பி, அவற்றை கேட்டேன்.

சனி, 5 அக்டோபர், 2013

பதிக்கென வாழ்வாள் பதியின் வாழ்வாள்!


தன்பதிக்கென வாழ்ந்த பதியிவள்
தன்னாசைகள் எலாம் துறந்தவள்
இன்முகத்தொடு பதியை பார்த்தவள்
இல்லானிற்காய் வாழ்வினை நீத்தவள்!

தன்னிலை துறந்த போதும்பதி
தன்னிலை துறவாத பதியிவள்
என்னிலிவன் என்றே இவள்
எண்ணிலாதன செய்தாள் நிதம்!

விதியின் மாறுதலான் சிக்குண்டு
வடிவென வந்த மங்கைபாலவன்
அதிகாதல் பூண்டு நிலையழிந்த
அதிகாரம் தெரிந்தும் மௌனித்தவள்!