It கலைமகன் கவிதைகள்: மார்ச் 2014

வெள்ளி, 28 மார்ச், 2014

கைம்மாறு இதுவோ என்பாரோ?

வரும்வரை வருவார்
வந்தபின் யார்என்பார்
நிலத்தில் கால்பதித்தபின்
நம்மவரை
விடம்கொண்ட நாகத்து
நிலையிலிருந்து
நோக்குவார்.. அப்போ
நோக்கங்கெட்டவர்
நாமே ஆவோம்....

வெள்ளி, 21 மார்ச், 2014

பிணந்தின்னும் கழுகுகள்...

பச்சையும்
நீலமும் 
சிவப்பும்
பச்சோந்தியாய்...

பிணந்தின்னும்
கழுகுகளும்
ஊளைகளுக்குப் பயந்து
நாட்டை விட்டே
புலம் பெயர்கின்றன...

ஞாயிறு, 9 மார்ச், 2014

ஞாயிறு மறையாது! (பாடல்)


ஞாயிறு மறையாது
ஞாயிறு மறையாது
நாயன் நினையாமல்
ஞாயிறு மறையாது…

குழந்தை எனக்குள் ஞாயிறு
தாயு மெனக்குள் ஞாயிறு
குழந்தை மொழியாள் ஞாயிறு
குவலய மெங்ஙனும் ஞாயிறு

ஞாயிறு மறையாது
ஞாயிறு மறையாது
நாயன் நினையாமல்
ஞாயிறு மறையாது….

தீந்தமிழ் எனக்குள் ஞாயிறு
தித்திக்கும் முத்தமிழ் ஞாயிறு
சுந்தர மனத்தாள் ஞாயிறு
கவிதை பொருள்கள் ஞாயிறு

ஞாயிறு மறையாது
ஞாயிறு மறையாது
நாயன் நினையாமல்
ஞாயிறு மறையாது….

நல்லன நினைத்திட ஞாயிறு
நலமாம் பணியிடை ஞாயிறு
இல்லாள் நல்லாள் ஞாயிறு
இனிது வளர்ந்திடு ஞாயிறு..

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்

09-03-214

(தயவுசெய்து முடியுமானவர்கள் இதனைப் பாடலாக பாடியனுப்பவும். ismailmfairooz@gmail.com)

தீர்ந்தது என் (காதல்) வலி இன்றே…!


அத்தான் என்னத்தான் என்பதில் மயங்கி
அருகிணைந்தேன் எனை யிழந்தே னன்று
முத்தங்கள் சரமாரியாய் பெற்றே னன்று
முத்தங்கள் செல்களென அறிந்தேன் பின்!