It கலைமகன் கவிதைகள்: ஆகஸ்ட் 2015

சனி, 29 ஆகஸ்ட், 2015

பைந்தமிழாள் என்னுள் வந்துவிடு நீ!

தமிழ்ச் சிந்து!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சிந்துதே உள்ளத்து தேன் தமிழ்
சிந்தை தைக்குதே அன்புச் சரம்
உந்துதே மனமுந்துதே தமிழால்
சிந்தனை பலவாய் ஊறுதே ஈதில்!

சிந்தனை யென்னவோ சிந்து தமிழே
சிந்தனை மீதெனை ஏற்றினை நலமே
உந்தன் நினைவினில் ஆடினேன் நானே
உந்த னன்பினில் உனைச் சுவைப்பேன்!

பைந்தமிழாள் என்னுள் வந்துவிடு நீ!

தமிழ்ச் சிந்து!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிந்துதே உள்ளத்து தேன் தமிழ்
சிந்தை தைக்குதே அன்புச் சரம்
உந்துதே மனமுந்துதே தமிழால்
சிந்தனை பலவாய் ஊறுதே ஈதில்!

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

நயினை தந்த நல்லாசான் நாகேஸ்வரன்!

நயினை தந்த நல்லதோ ராசான்
நெஞ்சத் தினிக்கும் நற்றமி ழாசான்
நயமாய் நெஞ்சத் தமர்ந் திட்டாசான்
நாகேஸ்வரன்  சங்கத்தினி லென் னாசான்!

குணக் குன்றாய பேச்சினின் மறந்து
கிடைக்காத தேனோ அன்றென்று மனம்
துன்புற்றதே யெந்தன் ஐயாவை யுன்னி
தெளிந்தே னின்றேனும் ஆசானே யென்று!

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

எனக்கு வாப்பா வேணும்!

உம்மா...
அப்பா... உம்மும்மா....
எங்க வாப்பா எங்க...?
நான் வாப்பாக்கிட்ட
போஹோனும்!

உம்மா...
ஏண்ட வாப்பா தங்கமானவரு
ஏண்ட வாப்பா இரக்கமானவரு
உம்மா
எனக்கு ஒண்டும் வேணாம் உம்மா
எனக்கு வாப்பா வோணும்
எனக்கு வாப்பா வோணும்!

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

தூயமனத்தார்க் களிப்பீர் வாக்கு!


ஆனைதருவேன் பூனை தருவேன் என்று
அடுக்கடுக்காய் தந்த பொய்ப் பொத்தல்கள்
ஆனையளவும் நாளை புலர்ந்திட அருகாகி
அச்சத்தால் விம்மிப் புடைக்கும் உண்டி!
வெறும் வாய்க்கு வெற்றிலை கெட்டவரும்
வெறும் வாய்க்கே சொன்ன பொய்களெலாம்
வெறுக்கும் நாள் புலர்ந்திட பீதியுற்றவர்
வெட்கிக் குனிந்திட நாளைவருது தேர்தல்!
அழகு மயில்களாட வான்கோழி யன்னார்
ஆட்டிய ஆட்டங்கள் ஆட்டம் கண்டிடவே
விழலுக்கிரைத்த நீரென போய்விட நாளை
விடியலில் விரல்கள் பூசிடும் ஊதாமை!