It கலைமகன் கவிதைகள்: 2016

சனி, 10 டிசம்பர், 2016

ஆணா இல்லை பேடியா இவன்?

நீள்கரு முகிலன்ன சிகையொடு ஒருவன்
நில்லாது தள்ளாடி வரக்கண்டேன் அவன்
நீள்புருவங்க ளுயர்த்தி கடுக்கண் ணிட்டு
நிலத்தினில் பேதையாய் வரக் கண்டேன்

கண்டேன் அவனாணோ இலை பேதையோ
கருத்தினி லுன்ன வியலவிலை போயும்
கண்களை அகலத்திறந்து நோக்கிடவே ஐயோ
கோலம்செய் யவன் பேடியே என்றுன்னினேன்

துயராடும் ஆசான்கள்!

தூண்டிலி லகப்படு மீன்களடா நாம் தொண்டு செய்திடு மாசான்களடா உண்டு களித்திட வொருவேளையேனும் வலியவர் கரங்கட்குள் சிக்கினோமடா... உச்சாணி யேறிட வுதவிடு மேணிகளடா

செவ்வாய், 15 நவம்பர், 2016

வெண்ணிலவே நீ வாழ்வியல் பாட்டு!


வெண்ணிலவே நீ வாழ்வியல் பாட்டு!
-------------------------------------------------------------------
எம்முள்ளம் மகிழ்வதற்கோர் எழிலொரு தோற்றம்
எமையெலாம் சுவீகரிக்குமோர் ஒளிச் செவ்வட்டம்
இம்மையினின் ஈடில்லை இந்நிலவிற் கேதும்
ஈகையதாய் ஒளிமல்கும் நீலத்துகில் தன்னில்

புதன், 9 நவம்பர், 2016

குரு வழிக் கவிகள்

வெண்பாவில் கவியியற்ற ஆசையால், எனதாசான் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் கவிகளின் சாயலில் யானும் கவிதைகள் எழுதிப் பார்த்துள்ளேன்.

புலவோர் பிழைகளைச் சுட்டினால், இன்ஷா அல்லாஹ் என்னால் அவற்றைத் திருத்திக் கொள்ள ஏதுவாக அமையும்.

உங்கள் தட்டிக் கொடுப்புக்களை விரும்புகிறேன்.

- தட்டிக் கெடுப்புக்களையல்ல.

-தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்

புதன், 17 ஆகஸ்ட், 2016

மார்க்கம் என்ன?

நீள்வான் மதியருக்கன் அண்டமுகடும்
நிற்பன நில்லாதன அனைத்தும் படைத்து
சூழ்புவியில் சிறந்த உயிராய் மனுக்குலம்
தனை யியற்றிய இறையொருவனை போற்றி!
கவிவாணர் குலவோர் சூழ்ந்து நிற்க
கவிமர பறியாயான் கவிபாட வந்துற்றேன்
கவிதன்னில் கவியிவன் கொம்பரேறி கவிபாட
குறைகளைந்து நிறைகாண்பீர் தோழமைகாள்!

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

இதயத்தொட்டிடு தமிழை

இதயத்தொட்டிடு தமிழை
-------------------------------------
தமிழ்மொழி இனிது - எங்கள்
இதயந்தொட்டிடும் அமுது
கனிமொழி எங்கள் தமிழே - அது
குவலயத் தலைமொழி போற்று...
குவலயத் தணிமொழி போற்று... (11)

சனி, 6 ஆகஸ்ட், 2016

வழுத்தினேன் அகவையறு பத்துநான்கில்!

குருவெந்தன் நாகேசுவரன் அகவையறு பத்துநான்கில்
காலடி யூன்றிட்ட விடயந்தானறிந்தேன் - அவர்
திருமுகமென்னின் னென்றைக்கும் நிலைக்கும் - அவர்
திருக்குணங்கள் தானும் என்றும் நிலைக்கும்!

பண்பான நல்லியலார் நாகேசுவர னாசான்
பணிவான குணங்குடிதான் நாகேசுர னையா
இன்முகத்தொடு கல்விதரும் பங்கே தனியழகு

செவ்வாய், 5 ஜூலை, 2016

தக்பீர் முழக்கம் செவியினிக்க…

தக்பீர் முழக்கம் செவியினிக்க… --------------------------------------------------- பண்ணவன் சொல் சிரமேற்கொண்டு பசித்திருந்து பொழுது சாயுங்கால் புண்ணியம் பெற்றிடவே அவாவுற்று பதியினில் செய்திட்டோம் அறம்! விண்ணகம் மண்ணகம் போற்றும் வான்மறை அநுதினம் ஓதிட்டோம் தண்ணளி பெற்றிட்டோம் உயர்சுவனம் தமக்குக் கிடைத்திட இயற்றினோம் பல!

ஞாயிறு, 3 ஜூலை, 2016

அகர வித்தக - ககரக் கவி

களங்கமில் மனமே
காதல் கொண்டேன் உன்னில்
கிள்ளை மொழி பேசி
கீற்றென நில் மனமே!
குவலயம் செழித்திட மனமே
கூவிடு யாமெலாம் ஒன்றென்று
கெட்டவரழிந்து நல்லோர் தோன்றிட

புதன், 20 ஏப்ரல், 2016

மெய்யொடு வாழ்வாய் நீ!

மும்மையும் மலராய் படைத்தவன்
மதியினும் மேலாய் தந்தானென்கு
இம்மையினில் சீராய் ஒருமகவு
இன்னலில்லை இடுக்கணிலை இவள்
அருகிருக்க கவலையே இலைஎன்னில்!
----
காரிருள் தோற்கும் இவள் சிகையில்
கதிரவன் தோற்பான் இவள் ஒளியில்
கணைகள் தோற்றிடும் இவர் நுதலில்
கதிரவன் ஏங்குவான் வால் எயிற்றில்…
----

வியாழன், 31 மார்ச், 2016

கனவு! - மௌலவியா றுஷ்தா இப்ராஹீம் (B.A) (அஷ்பா)

காத்திருப்புகளும் எதிர்பார்ப்புகளும்
உதிக்குமே என்றென்றும்
கானலின் தூரலாய்
துயிலின் மத்தியிலே...........
  
நிறைவேறா ஆசையை
நிறைவேற்றும் யுத்தியாய்
மானிடரை மூழ்கடிக்கும்
மந்திரமான வலையதுவே.........

சனி, 26 மார்ச், 2016

சாதி சாதித்ததென்ன சோதி!

சாதி சாதியென்றே சிறுமைத்தனத்து
சங்கடந்தான் பிறர்க்கீயும் சாதிபேசி
நீதவான் நாங்கள் தானெனப்பேசும்
நீதமற்றாரின் பண்பை ஏதென்பேன்!

உயர்சாதி நாமென்று பிறரைத்தான்
உயர்விலா இழிசாதி என்றுரைத்து
பெயர் புதியன அவர்க்கியற்றி
பெருமை பெற நினைப்பவரீனர்!

செவ்வாய், 22 மார்ச், 2016

நிலத்தின்மீது ஏது குற்றம்?

சிசுப் பருவம் முதல் சிரசுபழுத்து
பாடையினின் போகுமட்டும்
மனுக்குலத்திற்காக உழைத்த
தருக்களில்
பாவி மனிதன்
காமுற்று கற்பழித்ததால்
நீர் கருச்சிதைவாகின…
ஓங்கி உயர்ந்த பருவதங்கள்
இது கண்டு
கடும் வக்கிரத்துடன்

சனி, 19 மார்ச், 2016

உலகக் கவிதைத் தினக் கொண்டாட்டம்

உலகக் கவிதைத் தினக் கொண்டாட்டம் 2016 மார்ச் மாதம் 21 ஆந் திகதி கொழும்பு - 7 இல் அமைந்துள்ள தாமரைத் தடாக அரங்கில் நடைபெறவுள்ளது. 

உள்ளக அலுவல்கள் , வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள்

வியாழன், 17 மார்ச், 2016

பெற்றோர் இன்பம் ஏதில்?

அன்னை தந்தை தன்பிள்ளை அருமந்த பிள்ளையாய்வரவே

என்றும் நல்லன வியற்றுவர் தம்முயிர் வாட்டியேதான்
மண்ணினின் சிறந்தோன் தன்பிள்ளையே யெனக்கேட்க இவர்
பொன்பெற்றதாய் நினைவர் பாரினி லுயர்ந்தோர் பெற்றோரே
-கலைமகன் பைரூஸ்

வியாழன், 10 மார்ச், 2016

புன்னியாமீன் எனும் ஆளுமை!

பிரபல எழுத்தாளும், ஆசிரியப் பெருந்தகையும், பன்னூலாசிரியருமான கண்டி, உடத்தலவின்னை மடிகேயைச் சேர்ந்த பீ.எம். புன்னியாமீன் இன்று இயற்கையெய்தினார். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” அவரின் நினைவாக இந்தக் கவிதை எழுதப்படுகின்றது.

செவ்வாய், 26 ஜனவரி, 2016

மாகாவியம் வரட்டும்! -கலைமகன் பைரூஸ்

வைரமான வரிகள் தரும் வைரமுத்து
உங்களுக்கே சொந்தமான வரிகள்…
உங்களுக்கே சொந்தமான குரல்…
உங்களுக்கே சொந்தமான வீராப்பு…
உங்களுக்கே சொந்தமான “ஈரம்”
ஈழமண்ணை மாகாவியமாக்கத் துடிக்கும்
இதயத் துடிப்பு…
இதயத்து ஒட்டுகின்றதுதான்…

வெள்ளி, 1 ஜனவரி, 2016

கவிதா சகி தருகிறேன் பதில்!

என்னால் ஏன் எழவியலாது
என
எடுத்தாண்ட எழுத்துக்களில்
எல்லாம் நீங்கள்
எழுமாற்றாக எழுதினீர்கள்
எழுந்துநிற்க ஏணியில் ஏறியோர்
எட்டியும் பார்க்காமைக்கு
என்னதான் நான்செய்யலாம்?
எனக்குள் பீனிக்ஸ் பறவை…
எழுந்துவருவேன் சாம்பரிலிருந்து
எட்டப்பர்கள் எத்தனை நாட்களுக்கு….

எனக்குள் உள்ள ஆளுமைகள்