It கலைமகன் கவிதைகள்: ஆகஸ்ட் 2016

புதன், 17 ஆகஸ்ட், 2016

மார்க்கம் என்ன?

நீள்வான் மதியருக்கன் அண்டமுகடும்
நிற்பன நில்லாதன அனைத்தும் படைத்து
சூழ்புவியில் சிறந்த உயிராய் மனுக்குலம்
தனை யியற்றிய இறையொருவனை போற்றி!
கவிவாணர் குலவோர் சூழ்ந்து நிற்க
கவிமர பறியாயான் கவிபாட வந்துற்றேன்
கவிதன்னில் கவியிவன் கொம்பரேறி கவிபாட
குறைகளைந்து நிறைகாண்பீர் தோழமைகாள்!

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

இதயத்தொட்டிடு தமிழை

இதயத்தொட்டிடு தமிழை
-------------------------------------
தமிழ்மொழி இனிது - எங்கள்
இதயந்தொட்டிடும் அமுது
கனிமொழி எங்கள் தமிழே - அது
குவலயத் தலைமொழி போற்று...
குவலயத் தணிமொழி போற்று... (11)

சனி, 6 ஆகஸ்ட், 2016

வழுத்தினேன் அகவையறு பத்துநான்கில்!

குருவெந்தன் நாகேசுவரன் அகவையறு பத்துநான்கில்
காலடி யூன்றிட்ட விடயந்தானறிந்தேன் - அவர்
திருமுகமென்னின் னென்றைக்கும் நிலைக்கும் - அவர்
திருக்குணங்கள் தானும் என்றும் நிலைக்கும்!

பண்பான நல்லியலார் நாகேசுவர னாசான்
பணிவான குணங்குடிதான் நாகேசுர னையா
இன்முகத்தொடு கல்விதரும் பங்கே தனியழகு