It கலைமகன் கவிதைகள்: ஏப்ரல் 2017

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

தமிழுக்குப்பெருமை - இலக்கணப் பெருமை!



குறிப்பு -

நிலாமுற்றக் குழுமத்தில் - கவியரங்கில்  இந்தியப் பெரும்புலவர்கள் 107 பேருடன் நானும் கலந்து கொண்டேன்.
“தமிழுக்குப் பெருமை - இலக்கணப் பெருமை” எனும் தலைப்பில் எனது கவிதையைப் பதிவிட்டேன். போட்டியைக் கண்டதும் சடுதியாய்...

முகநூலின்கண் என் இப்பதிவினைக் கண்டு, தட்டித்தந்திருந்த நல்லுறவுகள் அனைவருக்கும் எனது நன்றிப் பூத்தூவல்கள் உரித்தாகட்டும்.

சனி, 15 ஏப்ரல், 2017

இனியுந்தான் பாடம் படிப்போம்!


மீத்தொட்டுமுல்ல மந்திரிமார் கண்களுக்குள் இல்ல செத்தொழியக்கொல்ல மந்திரிமார் கண்களுக்குள் உள்ள வித்தையைக் காணக்கொல்ல விசிரியடிக்க இப்போ இல்ல சொத்தியான ஒரு வெங்காயத் துண்டும்!

நிலாமுற்றக் கவிதைகள்

(1) மௌனம்
---------------------

(2) பாய்கின்ற (வாய்ப்பு வருங்கால் காத்திருத்தல்)
-----------------------
பாய்கின் றபுலி யெலாம் பதுங்கியே புதர்க்குள்
படுத்திருப் பதெலாம் பயந்தாங் கொளி யென்பதற்கா
வாய்புதைத் தேயிருப் போரெ லாம்மூ ட ரன்று
வாய்ப்பு வருங்கால் அடங்கி யிருக்கும் வல்லோரே!
-கலைமகன் பைரூஸ்
நி.மு 603
08.04.2017

காத்திடு சீற்றம் வந்திடும் வசந்தம்!

உள்ளத்தி லெரிகின்ற கனலது சீற்றம்
உனைச் சார்ந்தோரை பழிவாங்கிடுவது சீற்றம்
முள்ளாகக் குத்திடும் சீற்றமதை யடக்கிடவே
முன்னேவரும் உன்னிடம் கண்ணியத்தொடு மதிப்பு!

தன்னைத் தான்காக்கின் காத்திடுக சீற்றம்
தன்மீது அன்பின்றேல் வந்திடுமே சீற்றம்
உன்மீது வெகுளிதான் பிறர்கொண்டு பார்க்க
உன்சீற்றம் உனையழிக்கும் பலவாகப் பாரு

திங்கள், 3 ஏப்ரல், 2017

தாய்மொழி படும்பாடு பார்!

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் யாப்பியலை “காப்பியக்கோ” ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் ஆசானிடம் சற்றுக் கற்றேன்.

எனதாசான் கலாபுஷணம், சைவப் புலவர் சு. செல்லத்துரையும் ஆதரவு தருகிறார்.

புலவர் குழந்தையின் “யாப்பிலக்கணம்” நூலையும் கற்றுவருகிறேன்.

கற்றதை  வெளிக்கொணர “பயிற்சிகளை” மேற்கொள்கிறேன்.