It கலைமகன் கவிதைகள்: செப்டம்பர் 2017

சனி, 16 செப்டம்பர், 2017

சின்னஞ் சிறு கவிகள்! - கலைமகன் பைரூஸ்

பாவடிப் பணைத்தா ளுடைக் கரியும் பரியு மரிபோல் உயர் படையும் மேவியழிந் தனசரு கென வேயன்று மியன்மார் மடிந்திடும் பார்த்திரு அவ்வாறு

புதன், 13 செப்டம்பர், 2017

இதக் கொஞ்சம் யோசி மச்சான்! - கலைமகன் பைரூஸ்

கைகள் கரகட்ட வர
உடுப்பெல்லாம் ஊத்தபட
ஸுப்ஹிலேயே
யாவரத்துக்கு போரமச்சான்....
நான் சொல்றதக் கொஞ்சம்
கேளுமச்சான்....
அல்லா ரஸுல மறந்து
நாடுகாட்டுக்கு நீங்க போயி
ஆயிரங்கள் பல தேடியுந்தான்
என்னதான் கிழிக்கப்போற...
கோவம் புடிக்கவாணம் மச்சான்
நான் சொல்றதக் கொஞ்சம்
நிண்ணு நீ கேளுமச்சான்...

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

துணிந்தெழுந்த தகையே பாரதியே!

நல்லபல கவிகள் நெய்தே - அவை
நானிலத்தில் வாழ்ந்திடச் செய்தீரையா!
சொல்லுங்கள் பாரதி - உமைப்
போலக்கவி நெய்தவருண்டா ?
இளமையில் கவிபுனைந்தவருண்டா?
தவறுகள் கண்டு கரங்கள் கட்டிநின்றார் பதியில்
தட்டியெழுப்பி வீறுகொண்டிடச் செய்தனை
துணிந்தே எழுந்தீர் தகையிலாதாரை
பணிந்திட பண்பாயும் அக்கினியாய் எழுந்தும்
உம்படைப்பாயுதங்களால் நிமிர்த்தினீரையா!

`````````````````````````````````````````