It கலைமகன் கவிதைகள்: 2018

சனி, 29 டிசம்பர், 2018

பெற்றோர் எவ்வழி பிள்ளைகள் அவ்வழி!

நற்றருக்கள் நல்லனவே ஈயும் மதுரக்கனிகளாய்
நல்லுார்கள் நல்லோரையே நிலத்திற் றாங்கும்
போற்றற்குரிய ஆணும் பெண்ணும் இணைந்து
பெற்றிடும் பிள்ளைகளும் சிறப்பர் இருமையும்

புதன், 10 அக்டோபர், 2018

உளமதில் இடியாய் இடித்திடு வாய்நீ!

அடிமன தினாழத் தினினெனை வாட்டியே

அடிபடர்ந் திடுபா செனவிருந் ததேயடி

கடினமாய் பேரிடியாய் அறைந்திடு கன்னத்தடி

காதினினென் னொலியினின் குறைதந்த தேயாசான்!

சனி, 22 செப்டம்பர், 2018

நல்ல திருமணம்....?



திருமண மண்டபத்தில்
இவ்வாறிருந்தது...

'படம் பிடிப்பது முற்றாகத் தடை...'

அதற்கு மேலால் சற்று
கண்களை உயர்த்திப் பார்த்தேன்..

முக்காடின்றிய
பல மாற்றுமதப் பெண்கள்
'செல்பி' எடுத்துக் கொண்டிருந்தார்கள்..

கீழே இறங்கி வந்தேன்...

ஒரு பிச்சைக்காரன்
திருமண மண்டபத்தையும்
வருகின்ற போகின்றனவர்களையும்
வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்...

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

சாதி? - கலைமகன் பைரூஸ்

பிறந்தது நானும் நீயும் அம்மணத்தோடு...
பிதற்றுகின்றாய் இன்று நீ
பெருச்சாளி நானென்று...
உச்சாணியில் இருப்பதாய்ச் சொல்கிறாய்
உன்சாதிதான் பெரிதென்கிறாய்...
உன் கருமங்களை ஆற்றிக்கொள்ள
நான் - நாங்கள் - எம்மவர்
உனக்கு - உங்களுக்கு
பத்தரை மாற்றுத் தங்கம்....


திங்கள், 20 ஆகஸ்ட், 2018

தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறி பறக்கட்டும்

தடாகப் பன்னாட்டுப் படைவிழாவின் கவியரங்கிற்காக எழுதிய கவிதை. காலதாமானால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. என்றாலும் என் தளத்தில் ஏற்றி புளகாங்கிதம் அடைகிறேன்.

தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறி பறக்கட்டும்
தெங்கு வளர்ந்தோங்கும் தென்னகத்திருந்திங்கு
தௌ்ளு தமிழில் தெவிட்டாக்கவிபாடிடயான்
மங்காப் புகழுடையோர் முன்னேநாபிறழாமல்
மாண்புறு கவிபாடிட மாபெரியோன்நீயேதுணை!

முக்காட்டின் முழுநிலவைப் பேணிடுவோம்

முக்காட்டுக்குள் முழுநிலவாய் முகன்புதைத்து
பக்கவாட்டில் ஆரும்காணாதே பதுங்கியிருந்து
நீக்கமறுநாணக்கானில் நிற்கும் நற்காரிகையாள்
நற்றமிழை சீராய்ப்பொழியும் நற்றமிழாளேத்தினன்!


ஏத்திப்புகழ்ந்த காரணந்தான் ஏற்றம்கொள்வாரறிவர்
எடுப்பாய் கவிபடைத்த எடுத்துதிர்த்ததையறிவர்
நித்தமும் பாவடித்தபாவமைப்பு நெஞ்சினிக்கும்
நல்லாளலவள் பெற்றெடுத்தவர்தான் புகழ்ந்தேன்!

புதன், 8 ஆகஸ்ட், 2018

உன்றமிழி லெனையிழந்தேன்!

இயற்றமிழின் வித்தகன்நீ இயற்றிய நற்றமிழ்தான்
இதயத்தொடு ஒட்டியேயுளது இத்தரைத் தமிழுளத்து
செயற்கரியன செய்து சாதித்தாய் நற்றமிழிற்பல
சொல்வதுநான் எங்ஙனந்தான் செவியேற்க நீயிலையே!

நெஞ்சிற்கு(ள்) நீதியும் தென்பாண்டி(ச்) சிங்கமும்
நலமான குறளுக்காய் நீள்பனுவல் குறளோவியமும்
விஞ்சுபுகழ் நீட்டிநீதான் விந்தையாய் சங்கத்தமிழும்
விதவிதமாய் உனக்கான வித்துவத்தில் தந்தாய்பல!

வியாழன், 19 ஜூலை, 2018

தேடிவந்த விருதுகள்.. கூடவே முகநூல் கருத்துக்கள்

நான் எதிர்பாராமலேயே அல்லாஹ் அருளால் இவ்வாண்டு, இரு விருதுகளுக்கு நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.
1. “தமிழ்ச்சுடர்” விருது - தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு.
2. “ஊடக பேனா விருது 2K18" - அல்-மீஸான் பவுண்டேஷன், ஸ்ரீலங்கா.
தெரிவுசெய்த இரு அமைப்புக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

திங்கள், 16 ஜூலை, 2018

கொக்கு விடு தூது - கலைமகன் பைரூஸ்

**************************************************************
செங்கண் வெண்குருகே செல்லுமிடம் சொல்லாயோ?
செய்திகள் போய்த்தான் சேர்ந்தாரிடம் சொல்லாயோ?
எங்கண் நிறைந்துள்ள என்னவரிடம் நீதான்சென்று
எழிற்றமிழின் ஏற்றத்தை எடுத்துரைக்க மாட்டாயோ?
அங்கையினின் அவரென்றும் அகத்தினின் அவரென்றும்
அன்னமே மேகத்தொடு அலைந்து சென்றுநீதான்
ஏங்கிநிற்கும் அடியாளை ஏரெடுக்காது பற்றிநீதான்
எடுத்தோத மாட்டாயோ? என்தாபம் நீக்கமாட்டாயோ?

**************************************************************

அப்புள் அழகாய் அணிநடை போடும்நீதான்
அடியாள் பாடும் நற்றமிழ்கவி எடுத்துச்சொல்லாயோ?
எப்போதும் என்னுள் ஏற்றமாயுள என்னவரிடம்
ஏக்கங்கள் பற்றிநீதான் நற்றமிழில் பாடமாட்டாயோ?
தூதுவிட உனைப்போல் தரமாம்புள் எனக்கிலையே
தமிழச்சி என்னவளின் நாணம்விட்டு சொன்னேனே
ஏதுமறியாதே செல்வந்தேடும் என்னவரிடம் சென்று
என்னிலை எடுத்துச்சொல் ஏன்சுணக்கம் விரைந்துசெல்.
-கலைமகன் பைரூஸ்
15.07.2018
**************************************************************
நீளும்... இன்ஷா அல்லாஹ்!

புதன், 6 ஜூன், 2018

மூத்தவர் சொல்லை மதிக்கணும்! -சிறுவர் பாடல் 1


செல்லப்பாப்பா செல்லப்பாப்பா இங்கேவா
சொல்லும் செய்தி கேட்டு நீயும் திருந்தப்பா
கொள்ளை களவு பொய்யும் மிகவும் தீதப்பா
கனவிலும் செய்திட நீயும் எண்ணாதே!

செல்லப்பாப்பா செல்லப்பாப்பா இங்கேவா
சொல்லும் செய்தி கேட்டும் நீயும் திருந்தப்பா
நல்லவை சொல்லும் மூத்தோர்சொல் கேளப்பா
நாளும் நன்மை அதனால்தான் எண்ணப்பா!

தடாகம் பன்னாட்டுக் கலை இலக்கிய அமைப்பின் “தமிழ்ச்சுடர்” விருது

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18/08/2018ல் நடைபெறும் தடாகம் "பன்னாட்டு படைவிழா - 2018" ல், எனக்கும் “தமிழ்ச் சுடர்” விருதும் கௌரவமும் வழங்கி கௌரவிக்கவுள்ளதாக, அவ்வமைப்பின் முகநூலில் நிறுவுநர் கவிதாயினி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 3 ஜூன், 2018

நீதானா காட்டேரி ரெபேக்கா?


இஸ்லாத்தையும் இஸ்லாமியரையும்
இல்லாதொழிப்பதற்காக
இஸ்ரேலிய மமதையோடு
இம்சிக்கின்றாய் காஸாவை...
அடி ரெபேக்கா நீயாடி - எம்
அடிநெஞ்சின் ஆழத்தில்
இஸ்லாத்தை ஏந்தி
இடர்படுவோர்க்கு நல்லன செய்த
பலஸ்தீன வீர மங்கை - தாதி
ரஸான் அல் நஜ்ஜாரை
குறிவைத்த மாபாவி?

ஷஹீதானாலும் பலஸ்தீனத்தின்
அசையாத நம்பிக்கைக் கொடியுடன்
எவ்விதப் பாரமுமற்ற - விலையற்ற
கவனுடன் வீரப் போர்செய்கின்ற
அல்லாஹ்வையே சதாவும் நினைக்கின்ற

செவ்வாய், 29 மே, 2018

தமிழைப் போற்றிட எழுந்திடு தமிழா!


குமரிக் கண்டம் தமிழ்ப் பாவலர் சோலை
*********************************************
தலைப்பு : அன்னைத் தமிழை அமுதாய்ப் பருக (முதல் வரி)
**************************************************
எண்ணித் தமிழா எங்கும் எழுக! (இறுதி வரி)
***************************
தமிழைப் போற்றிட எழுந்திடு தமிழா!
*****************************************

அன்னைத் தமிழை அமுதாய்ப் பருக
அமுதமாய் ஒளிரும் நற்றமிழைப் பாட
அங்கையின் ஏந்தி அகிலத்தில் சுடர்விட
அன்புத் தமிழா சட்டெனவெழு தரணியிலே...


ஆண்ட தமிழ் ஆழுந்தமிழ் செந்தமிழே
அகிலத்தில் உயர்செம்மொழி நம் தமிழே
ஆழ்வார்கள் ஏந்திய தமிழ் கனிகைத்தமிழே
ஆண்டிட பாரில் வீழ்ந்திடாதது நற்றமிழே!

புதன், 16 மே, 2018

வைரத்தால் வைரத்தை வெல்லாமோ?


வைரம் கொண்டு வைரத்தை வெல்வதுபோல்
வைரத்தை வைரத்தால் வெல்லலாமோ?
வைரமே எலோரையும் அணைத்து
வையத்து ஒருமித்து வாழ்ந்திடத்தான்!

திரு(க்)கை


திருமதியவள் திருகையிலே கைபிடித்து
திருப்பித் திருப்பி மாவரைத்து வரும்
விருந்தினரை அகம்குளிர்ந்திடச் செய்திடவே
வடிவாகச் செய்கின்றாள் திருக்கைவந்த
வாணலியில் வெந்த உண்டியைத்தான்
திருமதியின் திருக்கைகள் திருகையிலே
தினந்தோறும் விதவிதமாய் பல்லுண்டி
திருவாளர் மனம்மகிழச் செய்திடவே
திருகையின் பேருதவி கிடைத்திடுமே
திருகைபோலின்று ஏதுமிலை இலகுவாய்த்

ஞாயிறு, 13 மே, 2018

பாதக் கொலுசொலி பாதையில கேட்கையிலே

குமரிக் கண்டம் தமிழ்ப் பாவலர் சோலை

காதல் கவிதைப் போட்டி - 1---------------------------------------
பாதக் கொலுசொலி பாதையில கேட்கையிலே

--------------------------------------------------------------------
அன்பான மச்சி எந்தன் உயிரே
அகத்துக்குள் குடிகொண்ட பொன் மயிலே
உன் பாதக் கொலுசொலி கேட்கையிலே
உயிரில் ஏதோ ஆகுதடி குயிலே...

ஆடிவரும் உன்னெழிலும் அழகுந்தான் ரதியே
ஆட்டம் காட்டுதடி மனசில் பதியே
ஓடிவராமலே கொலுசொலி தான் கனியே
ஒய்யாரமாய் உயிரை காவுகொள்ளுதடி மதியே!

புதன், 9 மே, 2018

ஏர் ஏத்து! - ஏர் பிடித்த கொடி!


ஏர் ஏத்து!
-----------
ஏருழவன் ஏற்றத்தை ஏத்திப் போற்று
ஏழையே யென்றுமவன் புகழேத்து
வீறுடைய அவனாற்றான் அவனியிது
வாகாக வலம்வருது ஏர் ஏத்து!

-கலைமகன் பைரூஸ்
நி.மு. - 2208

தண்ணிக் குடமெடுத்து தனிவழி போறவளே!

தண்ணிக் குடமெடுத்து தனிவழி போறவளே!
தங்கிநின்று எந்தன் கதையக் கொஞ்சம் கேளடி!
உன்மேல உசிரு நான்தான் கிளிபோன்றவளே!
 உதாசீனம் எனைச் செய்யாதே எந்தன் மயிலே!

பொன்னான மச்சி நீயில்லயா? என்னவளே
பொக்கிசம் நீதான் உடல்மீது உயிர் நீயல்லோ?

சனி, 5 மே, 2018

நற்றமிழையே ஏத்து!

தமிழனாய் பிறந்தோரில் பலர் தாய்த் தமிழை மறந்தின்று உமியுள அரிசிபோலத் தமிழை உரக்கவே சொல்கின்றார் அடச்சீ! சோவெனப் பெய்யும் மழைபோல “சோ”வும் “பட்”டும் வந்தாச்சு நோவினை யேயுளமெங்கு மிதனால் நோயுளோர் பற்றிஏதுசொல்வேன் சீ!

வெள்ளி, 4 மே, 2018

த. விமலேஸ்வரன் ஆசிரியைக்கான வாழ்த்துப் பா!

இன்று (04.05.2018) தனது ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறும் த.விமலேஸ்வரன் ஆசிரியையின் பிரிவுபசாரத்தின் போது, அவருக்கு வழங்கப்பட்ட வாழ்த்துக் கவிதை

விண்ணுயர்ந்தே வளர்ந்தோங்கும் பனையன்ன
விடிவிற்காய் வள்ளன்மையொடு தனையீந்த
பொன்மகளார் பைந்தமிழின் பேராளர் வித்துவான்
புலவரையா செல்லையா மகளே வாழ்க!

பைந்தமிழ்க்குப் பால்வார்த்த புலவோர் செறிந்த
பொன்மனங்கொள் சான்றோர்மிக்க

வியாழன், 3 மே, 2018

இறையை வேண்டுவோம்!


களிப்பே எங்ஙனும் கிடைத்திட இன்பங்கள்
காவல னருளே குவலயத்திடை துன்பங்கள்
வீழ்ந்தே மடிந்திட மனிதம் தழைத்திட
வேண்டியே நிற்போ மிறையை இக்கணம்!

-கலைமகன் பைரூஸ் (நி.எ 2208)

திங்கள், 30 ஏப்ரல், 2018

அபாயா + சாரி = பலூன்

சில்லறைப் பிரச்சினைகள்
சிங்காரிக்கப்பட்டு
பலூனாகப் பெரிதாக்கி
சமூகத்தை விலைபேசும்
பெரும் சாரிபோலாகி
இனங்களிடையே முறுகலை
பூதாகரமாக்கியுள்ளதே...

அபாயா போல்
இழுத்துமூடி
ஒதுக்கிக் கொண்டிருந்தால்
எமக்கான உரிமையை