It கலைமகன் கவிதைகள்: ஆகஸ்ட் 2018

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறி பறக்கட்டும்

தடாகப் பன்னாட்டுப் படைவிழாவின் கவியரங்கிற்காக எழுதிய கவிதை. காலதாமானால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. என்றாலும் என் தளத்தில் ஏற்றி புளகாங்கிதம் அடைகிறேன்.

தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறி பறக்கட்டும்
தெங்கு வளர்ந்தோங்கும் தென்னகத்திருந்திங்கு
தௌ்ளு தமிழில் தெவிட்டாக்கவிபாடிடயான்
மங்காப் புகழுடையோர் முன்னேநாபிறழாமல்
மாண்புறு கவிபாடிட மாபெரியோன்நீயேதுணை!

முக்காட்டின் முழுநிலவைப் பேணிடுவோம்

முக்காட்டுக்குள் முழுநிலவாய் முகன்புதைத்து
பக்கவாட்டில் ஆரும்காணாதே பதுங்கியிருந்து
நீக்கமறுநாணக்கானில் நிற்கும் நற்காரிகையாள்
நற்றமிழை சீராய்ப்பொழியும் நற்றமிழாளேத்தினன்!


ஏத்திப்புகழ்ந்த காரணந்தான் ஏற்றம்கொள்வாரறிவர்
எடுப்பாய் கவிபடைத்த எடுத்துதிர்த்ததையறிவர்
நித்தமும் பாவடித்தபாவமைப்பு நெஞ்சினிக்கும்
நல்லாளலவள் பெற்றெடுத்தவர்தான் புகழ்ந்தேன்!

புதன், 8 ஆகஸ்ட், 2018

உன்றமிழி லெனையிழந்தேன்!

இயற்றமிழின் வித்தகன்நீ இயற்றிய நற்றமிழ்தான்
இதயத்தொடு ஒட்டியேயுளது இத்தரைத் தமிழுளத்து
செயற்கரியன செய்து சாதித்தாய் நற்றமிழிற்பல
சொல்வதுநான் எங்ஙனந்தான் செவியேற்க நீயிலையே!

நெஞ்சிற்கு(ள்) நீதியும் தென்பாண்டி(ச்) சிங்கமும்
நலமான குறளுக்காய் நீள்பனுவல் குறளோவியமும்
விஞ்சுபுகழ் நீட்டிநீதான் விந்தையாய் சங்கத்தமிழும்
விதவிதமாய் உனக்கான வித்துவத்தில் தந்தாய்பல!