திங்கள், 6 நவம்பர், 2023

வகவமும் தினகரனும்

எனை உச்சாணியில் ஏத்திய வகவமும் அடையாளம் தந்த தினகரனும்! - கலைமகன் பைரூஸ்
   
என் எழுத்துகளுக்கு அச்சாணியாய் அமைந்தது 'தினகரன்' என்று சொல்லிக் கொள்வதில் முதலில் நான் பெருமிதமடைகின்றேன். எனது ஆரம்ப எழுத்துக்கள் தினகரன் சிறுவர் உலகத்திலேயே (ஆனந்தி அக்காவின் தயாரிப்பில்)  1985 களில் முகிழ்த்தது. 

மறந்திட அருள்தருவாய்!


எலோரும் ஏத்திடத் தானென் னாசானும்

ஏத்தினார் ஏத்தினேன் ஏற்றமாய் என்னில்

அழுதேன் அவர்மொழி கேட்டே யானும்

ஆடித்தான் போனதுள் ளந்தான் பிளந்தது!