புதன், 22 மே, 2024

மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான தீர்வுதான் என்ன?


மெல்ல கற்கும் மாணவர்களின் இயல்புகள் மற்றும் அறிகுறிகளும் அவர்களை கையாளும் நுட்பங்களும்.

இக்கட்டுரையானது மாணவர்கள் சார்ந்து இயங்கக்கூடிய பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவ வழிகாட்டல் ஆலோசகர்கள் விசேட தேவைக் குரிய மாணவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உரித்தானதாகும்.

செவ்வாய், 21 மே, 2024

புள்ளி அளவில் ஒரு பூச்சி

புள்ளி அளவில் ஒரு பூச்சி எனும் தலைப்பை ஆராய்ந்தோம் எனில் மிகப்பொருத்தமாக மஹாகவி அவர்களால் தலைப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் கவிஞன் புத்தகத்தில்  ஏதோ ஒரு காற்புள்ளி என தட்டி விடுகிறான். ஆனால் உண்மையில் அந்த இடத்தில் இருந்தது ஒரு சிறிய பூச்சியாகும். தட்டுப்பட்டதாலோ என்னவோ பூச்சி இறந்து விட்டது.

வியாழன், 4 ஜனவரி, 2024

யார் இந்த கலீல் அவ்ன் மௌலானா?

நற்சுவனம் செலதுஆத்தான் இரந்தேனே!

தித்திக்கும் தீந்தமிழ்க்கா வியம்தந்தே நின்றாரே

தெவிட்டாத நல்லறக்கா வியங்களுந்தான் தந்தாரே

புத்திக்கு மினிதான நற்கவியும் ஈந்தாரே

பண்டிதரெம் மௌலானா கலீல்அவ்ன்!


நற்றமிழும் நன்மறையும் நனிசிறந்த தனவவரில்

நற்குலமாம் ஹாஷிமியாம் குலத்தினின னருமந்தன்