ஞாயிறு, 30 மார்ச், 2025

தாயின் அன்பிலும் உயர்ந்தவனே, காத்திடு நீயே

 

நாங்கள் ஆடைகள் எடுத்தோம்...

புதுப்புது உணவுகளுக்காக
பொருட்கள் வாங்கினோம்..
உற்றார் உறவினருடன் உல்லாசமாய்
உலாவிவர ஆவன செய்தோம்...

எங்கள் இரத்த உறவுகள்
நாளும் இரத்தம் சிந்தி
உடலங்கள் கற்களுக்குள்ளும்
சிதைந்தும்
உடலங்கள் காணாமற் போயும்
உறவுகள் இழந்தும்
உறக்கங்கள் துறந்தும்
வயிற்றில் கற்களைக் கட்டிக் கொண்டு
இருந்தும் இல்லாமலிருக்கிறார்கள்...

அவர்களின் படங்கள்

செவ்வாய், 4 மார்ச், 2025

எதுவுண்டு சொல்? | மெய்யன் நரடாஜ்

நண்பன் மெய்யன் நடராஜின் அருமந்த கவிதைகளில் ஒன்று. வாசித்துத்தான் பாருங்களேன் நீங்களும்....

--------------------------------------------------

தேனாட மலருண்டு தீயாட விளக்குண்டு

திருந்தாதார் தானாடத் தெருவுண்டு
மீனாட விழியுண்டு முகிலாட வானுண்டு
முளைக்காத விதையாட நிலமுண்டு
கானாட மயிலுண்டு கனியாடக் கிளையுண்டு
கதிராட நீர்கொண்ட வயலுண்டு
தானாடா விட்டாலும் சதையாட லதுவுண்டு
தன்னலங்க ளில்லாதா ரெவருண்டு?
*
அலையாட கரையுண்டு அணிலாடக் கிளையுண்டு