ஞாயிறு, 17 நவம்பர், 2019
விருந்து எப்படித் தருகிணமோ அறியோம்....!
வெடிக்கிறது எங்கும் பட்டாசு
துடிக்கிறது சிறுபான்மை மனசு
கடித்திடுமா சிங்கம் மீண்டும் என
அடிமனதில் எரிகிறது ஐயமேதீயாய்!
---
கோத்தா வந்தாரு ஏற்கிறோம் நாம்
சோத்தத்தானும் தின்ன வெச்சா காணும்
நித்தமும் வித்தியாசம் எமில் காணாது
நாமும் மனிதர்தாம் என்றாக் காணும்!
---
வந்த தலைமையை ஏற்றோம் நாம்
வராதா சுபீட்சம் என்றிருந்தோம் நாம்
வந்த தலைமை சிறுபான்மை எமக்கு
விருந்து எப்படித் தருகிணமோ அறியோம்...
----
-கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக