வியாழன், 19 மார்ச், 2026

AliLarijani உங்களைப் போற்றி கணைகள் எழும்!

புர்க்கான் எனும் இறைமறையை
உள்ளத்தில் பூரணமாய்ச் சேர்த்தீர்
உலகம் அறியாத கணிதச் சிந்தனை,
உளவியல் ரகசியத்தை கற்றீர்
ஈரானியர் பேரெழுத்து மறைந்தாலும்,
உங்கள் நினைவு உலகில் வாழும்!
அறிவின் வெளிச்சமாக நீங்கள் இருந்தீர்கள்,
நாட்டின் பாதுகாப்பில் நீ அஞ்சாநெஞ்சர்,
கடுமையான நிலைகளில் நீங்கள் எழுந்தீர்கள்,
இறைவின் கருணையில் உயரிய இடம் பெறுவீர்கள்!
கடல் போல் ஆழமான உளவியலில்,
நெறிக்கோல் காட்டிய அரசியல் பயணத்தில்,
ஒப்பந்தம், நீதி, அறிவு அனைத்திலும்,
உயர்ந்த பாதை உங்களால் சேர்க்கப்பட்டதே!
சுற்றிய சூழல் மாற்றங்கள் கடுமையான போதும்,
ஆற்றல்களில் சளைத்திடவில்லை
தூண்டப்பட்ட சவால்களை நீங்கள் தணித்தீர்கள்
மண்ணும் மக்களும் உங்களை என்றும்
ஆழ்மனதில் நீளவே நினைவு கொள்வர் திண்ணம்!
இனியும் வாழும் உங்கள் அகன்ற கனவு,
சட்டமும் நீதியும் உலகில் ஒளிரும்;
பல்வேறு தடைகளும் இனித் தகரும்
பதிலளிப்பர் உங்கள் பெயரால் சீறிப்பாய்ந்து
முடிவும் வரும் போக்கிரிகளுக்கு நிச்சயம்
தான் என்ற மமதை ஜஹன்னத்திற்காய் போகும்..
ஜன்னத்தில் உயர்ந்த இடத்தில் நீங்களமர்ந்து
சுகபோகம் சிறப்பாய்ப் பெற்றிட
உலகமே உங்களுக்காய் துஆ இரக்கும்
சாதி மத கோத்திரங்கள் மறந்து
'வீட்டோ பவர்' மனித மனங்களில் உள்ளதே
வாழ்த்துவர் உங்கள் கனாக்கள் மெய்ப்பட!
REST IN JANNAH!
- தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக