ஞாயிறு, 29 மார்ச், 2026

யுத்தத்தை நிறுத்து! | Kalaimahan Fairooz

நீ தலைமையேற்றாலும்
இல்லை இனி உலகம் உனக்கு
உனக்கு தலையணையாததில்
இல்லை மனிதம்!
குருதியால் எழுதும் வரலாறு
வெற்றி அல்ல;
கண்ணீரால் அழியும் குழந்தை
எதிர்காலம் தான்!
“NO KING!” என்று கூவுகின்ற
இந்தக் குரல்கள் கேள் -
மக்களின் மூச்சு திணறும்போது
அரசின் சிங்காசனம்
எதற்கு?
போரின் சத்தம் ஒலிக்கையில்
அம்மாவின் தாலாட்டு மௌனம் ஆகிறது;
குண்டுகள் விழும் மண்ணில்
மலர்கள் மலர மறுக்கின்றன.
அதிகாரம் என்ற பெயரில்
அழிவை விதைக்காதே!
அது உனது வெற்றி அல்ல,
மனிதனின் தோல்வி!
நீதியை கேட்கும் கைகள்
இன்று கோபமாக உயர்ந்துள்ளன;
அந்தக் கைகளில் ஆயுதம் அல்ல,
நம்பிக்கை இருக்கட்டும்!
உனக்கு கூசா தூக்கியவர்கள்
உன் பாடையை தூக்க இருந்தவர்கள்
உன்னை அரியணையிலிருந்து
உலகமே நகைக்கும் வண்ணம்
உயரப் பிடிக்கிறார்கள் கொடிகளை!
முன்னர் உனக்காககத்தான்
பின்னர் மனிதத்திற்காகத்தான் உயர்ந்தன!
உன் கையாலாகாததனம் பற்றி
மேற்கத்தேயம் கண்டுவிட்டது...
மண்டையில் ஏதும் இல்லாததை
மிருகத்தனமாய் அழிக்கும் உன் யுத்தியும்
மிகவே காட்டிவிட்டது...
யுத்தத்தை நிறுத்து!
மனிதனை காப்பாற்று!
இல்லையெனில்
வரலாறு உன்னை மன்னிக்காது…
- தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக