காலம் சோதித்தது...
குருதியாய் குற்றம் சுமத்தி,
கண்ணீராய் களங்கம் பூசி -
ஒரு மனிதனை மௌனத்தில் மூழ்கடித்தது...
ஆனால்,
அதே காலம்...
ஒருநாள் நீதியின் நாதஸ்வரமாய்
உண்மையை எழுப்பி நின்றது!
மரணத்தின் வாசலில்
மயங்கிக் கிடந்த ஒரு தாய் -
முடிவின் மௌனத்தை நோக்கிச் சென்றபோது,
உயிரின் உச்சரிப்பாய் வந்தார் அவர்!
நோன்பின் நேரம் அது...
