(1) ராஜகவி ராஹில்
--------------------
கலைமகனே
கவிமகனே
காலத்தால் அழியாத புனை தமிழ் மகனே !
தமிழ் மகளை
கவித்திரு மகளை
புகழ் மகளை
புவினறு மகளை
சுவையுறு மகளை
அவை ஒளி மகளை
சிகரம் கொண்டு செல்லும் புலமை மகனே !
பாவாக்கினாய்
பூவாக்கினாய்
தேனாக்கினாய்
தீயாக்கினாய்
தேளாக்கினாய்
தமிழ்தனை ஊராக்கி
புகழ் தனைப் பேராக்கி
நீயானாய் பாவண்ணனே !
கவிப் புலியானாய் பா மன்னனே !
வாழ்க
உன்தமிழ் !
வாழ்க
உன் ஆயுள் !
வாழ்க
உன் செல்வம் !
வாழ்க
உன் நலம் !
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !