வாதங்கள் மறந்திடுவீர்
வீண் விதண்டாவாதம் செய்யாதிருப்பீர்!
பிரதேசவாதம் இல்லாதொழிப்பீர்
இயக்க நிலையும் இல்லாதொழிப்பீர்!
இரத்தம் கொடுப்பீர் - உம்
நல்லிரத்தம் கொடுப்பீர் உயிர் காப்பீர்!
உம்வாழ்வில் ஒளிபிறக்கும் மற்றான்
உம்வாழ்விற்காய் துஆ இரப்பான்
துளியேனும் இரத்தம் கொடுத்தே
பிறர் வாழ்வில் ஒளியேற்ற வழியாவீர்!
அந்தக்காரன் இந்தக்காரன் சொல்லொழித்து
அஞ்ஞானம் அழித்தொழித்து பிறர்வாழ்வு
நல்வாழ்வாய் மலர்ந்திட -ஓருயிரேனும்
நலம்வாழ நீவாழுங்கால் ஒருதுளி
இரத்த தானம் அளித்து மனிதநேயனாவாய்!
அஸ்ஸபாவிற்கு இக்கணமே செல்வாய்
அடைந்திடுவாய் புண்ணியம் இரத்தமீந்து
உனக்கு இரத்தம் ஒருக்கால் வேண்டின்
உன் இரத்திற்குப் பதிலாய் கிடைக்கு மிரத்தம்
சாதி மறப்பாய் சிறுமைக் குணம் மறப்பாய்
இயக்கங்கள் உனது எதுவாக இருந்திடினும்
சற்றுக் கீழிறங்கி ஒருதுளி இரத்தம் அளிப்பாய்!
சகத்து மனிதநேயம் தலைத்தோங்க நீ
செங்குருதியளித்து சீர்பெறுவாய்!
-கலைமகன் பைரூஸ்
18.12.2015
வீண் விதண்டாவாதம் செய்யாதிருப்பீர்!
பிரதேசவாதம் இல்லாதொழிப்பீர்
இயக்க நிலையும் இல்லாதொழிப்பீர்!
இரத்தம் கொடுப்பீர் - உம்
நல்லிரத்தம் கொடுப்பீர் உயிர் காப்பீர்!
உம்வாழ்வில் ஒளிபிறக்கும் மற்றான்
உம்வாழ்விற்காய் துஆ இரப்பான்
துளியேனும் இரத்தம் கொடுத்தே
பிறர் வாழ்வில் ஒளியேற்ற வழியாவீர்!
அந்தக்காரன் இந்தக்காரன் சொல்லொழித்து
அஞ்ஞானம் அழித்தொழித்து பிறர்வாழ்வு
நல்வாழ்வாய் மலர்ந்திட -ஓருயிரேனும்
நலம்வாழ நீவாழுங்கால் ஒருதுளி
இரத்த தானம் அளித்து மனிதநேயனாவாய்!
அஸ்ஸபாவிற்கு இக்கணமே செல்வாய்
அடைந்திடுவாய் புண்ணியம் இரத்தமீந்து
உனக்கு இரத்தம் ஒருக்கால் வேண்டின்
உன் இரத்திற்குப் பதிலாய் கிடைக்கு மிரத்தம்
சாதி மறப்பாய் சிறுமைக் குணம் மறப்பாய்
இயக்கங்கள் உனது எதுவாக இருந்திடினும்
சற்றுக் கீழிறங்கி ஒருதுளி இரத்தம் அளிப்பாய்!
சகத்து மனிதநேயம் தலைத்தோங்க நீ
செங்குருதியளித்து சீர்பெறுவாய்!
-கலைமகன் பைரூஸ்
18.12.2015







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக