ஆண்டொன்று அழிய அகத்தினின் மகிழ்ந்து
ஆகா வந்திட்டது அருமந்த ஆண்டென்று
பூண்டோடு பழையன மறந்து நாம்
பூதலத்து பவனி வருகிறோம் சரியோ?
அகலாதன எம்முள் எத்தனை எண்ணுவம்
அண்டியே வந்திடும் மரணம் எண்ணுவம்
அகன்றதா நாழிகைதான் என எண்ணுவம்
அடுத்த ஆண்டில் இருப்போமா எண்ணுவம்!
வந்திடு மாண்டை வரவேற்போம் நாம்
வருந்துவோரை ஆதரித் தணைப்போம் நாம்
முந்திடுவோம் நாம் முனியா திருந்திட
மற்றவர் மானம் காத்திட பலவாய்...!
எல்லாம் தெரிந்தவன் நானே என
எடுப்பான தப்பினை மாற்றுவம் நாம்
எல்லோரும் நாமொன்றே என்போம் நாம்
ஏகனவனின் அன்பினையே சதா உன்னுவம்!
தாய்த் தமிழொடு சிங்களமும் ஆங்கிலமும்
தரணியில் ஒன்றுடன் ஒன்று உறவென்போம்
பொய்ம்மை அழித்தொழிப்போம் ப+தலத்து நாம்
பகைமை அழித்தொழிப்போம் ஒன்றாவோம் நாம்!
ஆந்தைப் பார்வையொடு அடுத்தானை நாம்
அகன்று பாராதிருப்போம் வெறுப்புடனே.....
சிந்தை தெளிவோம் புத்தாண்டில் மலர்வோம்
சிகரம் தொட்டிட நல்நடையே பயில்வோம்...!
ஈராயிரத்து பதினான்கு பிறந்திடத்தா னின்னும்
ஈர்பத்தைந்து நிமிடந்தா னுளவே - என்றாலும்
நேராயதனை யான்தான் காண்பேனோ - மறை
நயந்திருப்பதனால் மரணமே விழிகளுக்குள் சதா!
இஸ்லாமிய ரெமக்கு முஹர்ரந்தான் புதுவருடம்
இங்கிதமாய் எலோரும் மனதினில் கொள்வோம்
விஸ்வாசந்;தான் கொள்வோம் அடுத்த நாழிகையிலை
வான்மறையொடு நாம் வாழ்வோம் - விடிவே!
பிறந்திடவுள ஆங்கில புத்தாண்டும் நம்மில்
பிறந்திடட்டும் நற்சிந்தனை பலதந்திங்கு சீராய்
இறவா புகழொடு நின்றிட நாமெலாம்
இம்மையில் மறுமைக்காய் சேர்ப்போம் பலவாய்!
-'“கவித்தீபம்” இஸ்மாயில் எம். பைரூஸ்
2013-12-31 11:30
ஆகா வந்திட்டது அருமந்த ஆண்டென்று
பூண்டோடு பழையன மறந்து நாம்
பூதலத்து பவனி வருகிறோம் சரியோ?
அகலாதன எம்முள் எத்தனை எண்ணுவம்
அண்டியே வந்திடும் மரணம் எண்ணுவம்
அகன்றதா நாழிகைதான் என எண்ணுவம்
அடுத்த ஆண்டில் இருப்போமா எண்ணுவம்!
வந்திடு மாண்டை வரவேற்போம் நாம்
வருந்துவோரை ஆதரித் தணைப்போம் நாம்
முந்திடுவோம் நாம் முனியா திருந்திட
மற்றவர் மானம் காத்திட பலவாய்...!
எல்லாம் தெரிந்தவன் நானே என
எடுப்பான தப்பினை மாற்றுவம் நாம்
எல்லோரும் நாமொன்றே என்போம் நாம்
ஏகனவனின் அன்பினையே சதா உன்னுவம்!
தாய்த் தமிழொடு சிங்களமும் ஆங்கிலமும்
தரணியில் ஒன்றுடன் ஒன்று உறவென்போம்
பொய்ம்மை அழித்தொழிப்போம் ப+தலத்து நாம்
பகைமை அழித்தொழிப்போம் ஒன்றாவோம் நாம்!
ஆந்தைப் பார்வையொடு அடுத்தானை நாம்
அகன்று பாராதிருப்போம் வெறுப்புடனே.....
சிந்தை தெளிவோம் புத்தாண்டில் மலர்வோம்
சிகரம் தொட்டிட நல்நடையே பயில்வோம்...!
ஈராயிரத்து பதினான்கு பிறந்திடத்தா னின்னும்
ஈர்பத்தைந்து நிமிடந்தா னுளவே - என்றாலும்
நேராயதனை யான்தான் காண்பேனோ - மறை
நயந்திருப்பதனால் மரணமே விழிகளுக்குள் சதா!
இஸ்லாமிய ரெமக்கு முஹர்ரந்தான் புதுவருடம்
இங்கிதமாய் எலோரும் மனதினில் கொள்வோம்
விஸ்வாசந்;தான் கொள்வோம் அடுத்த நாழிகையிலை
வான்மறையொடு நாம் வாழ்வோம் - விடிவே!
பிறந்திடவுள ஆங்கில புத்தாண்டும் நம்மில்
பிறந்திடட்டும் நற்சிந்தனை பலதந்திங்கு சீராய்
இறவா புகழொடு நின்றிட நாமெலாம்
இம்மையில் மறுமைக்காய் சேர்ப்போம் பலவாய்!
-'“கவித்தீபம்” இஸ்மாயில் எம். பைரூஸ்
2013-12-31 11:30
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக