It It கலைமகன் கவிதைகள்: இதயத்தொட்டிடு தமிழை Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

இதயத்தொட்டிடு தமிழை

இதயத்தொட்டிடு தமிழை
-------------------------------------
தமிழ்மொழி இனிது - எங்கள்
இதயந்தொட்டிடும் அமுது
கனிமொழி எங்கள் தமிழே - அது
குவலயத் தலைமொழி போற்று...
குவலயத் தணிமொழி போற்று... (11)
உலகில் எமக்கின்பம் நல்கிடும் தமிழே
கரும்பின் பிழிந்திட்ட சாறே தமிழ்
நிலத்தினின் நிலைத்திடும் மொழியே
நனிநனி சிறந்திடும் தமிழே - எந்தன்
நெஞ்சினின் கொஞ்சிடும் தமிழே...
இனிமை தமிழ்மொழி இனிது - எங்கள்
இதயந்தொட்டிடும் அமுது
கனிமொழி எங்கள் தமிழே - அது
குவலயத் தலைமொழி போற்று...
குவலயத் தணிமொழி போற்று...
தணிமொழி கனிமொழி நன்மொழி
தரணியின் உயர்மொழி உணரு
கணிமொழி செம்மொழி தமிழே
கருத்தினின் உன்னி நீ உயரு...
கருத்தினின் உன்னி நீ உயரு...
இனிமை தமிழ்மொழி இனிது - எங்கள்
இதயந்தொட்டிடும் அமுது
கனிமொழி எங்கள் தமிழே - அது
குவலயத் தலைமொழி போற்று...
குவலயத் தணிமொழி போற்று...
தமிழின் அழகெங்குண்டு - தமிழே
தரணியின் சொத்து - பைந்தமிழே
தமிழினச் சொத்து - பைந்தமிழே...
தமிழினச் சொத்து...
இனிமை தமிழ்மொழி இனிது - எங்கள்
இதயந்தொட்டிடும் அமுது
கனிமொழி எங்கள் தமிழே - அது
குவலயத் தலைமொழி போற்று...
குவலயத் தணிமொழி போற்று... 

-பாவாக்கம் -
கலைமகன் பைரூஸ் (இலங்கை)08.08.2016

(பண்ணமைத்துப் பாடி அனுப்பினால் நன்றியுடையவனாவேன்)

கருத்துரைகள்
---------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக