இந்த நிகழ்வுக்கு மன்றத் தலைவர் கலாபூஷணம் தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையேற்கவுள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் முன்னிலை வகிக்கும் இந்நிகழ்வில் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தெ. செந்தில் வேலவர் விசேட அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ள இந்நிகழ்வில், நூலின் முதல் பிரதியை பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் டாக்டர் எம்.சீ. பஹார்தீன் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
மன்றச் செயலாளர் எம்.எஸ்.எம். ஜின்னா வரவேற்புரை நிகழ்த்த, தெ. செந்தில்வேலவர், இலக்கியச் செம்மல் சட்டத்தரணி ரஷீத் எம்.இம்தியாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ள இந்நிகழ்வில் கலைஞானச் சுடர் சுபாஷினி பிரணவன் கவி வாழ்த்து வழங்குவார்.
இந்நிகழ்வினை கவிஞர் ரஷீத் எம். றியாழ் தொகுத்தளிப்பார்.
நிகழ்வு சிறப்பாய் நடந்தேற எனது வாழ்த்துகள்!
-கலைமகன் பைரூஸ் (வகவக் கவிஞர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக