It It கலைமகன் ஆக்கங்கள்: மனிதநேயத்தின் மின்னல் - வைத்தியர் ஷாஃபி! | கலைமகன் பைரூஸ் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 2 மே, 2026

மனிதநேயத்தின் மின்னல் - வைத்தியர் ஷாஃபி! | கலைமகன் பைரூஸ்

காலம் சோதித்தது...

குருதியாய் குற்றம் சுமத்தி,
கண்ணீராய் களங்கம் பூசி -
ஒரு மனிதனை மௌனத்தில் மூழ்கடித்தது...
ஆனால்,
அதே காலம்...
ஒருநாள் நீதியின் நாதஸ்வரமாய்
உண்மையை எழுப்பி நின்றது!
மரணத்தின் வாசலில்
மயங்கிக் கிடந்த ஒரு தாய் -
முடிவின் மௌனத்தை நோக்கிச் சென்றபோது,
உயிரின் உச்சரிப்பாய் வந்தார் அவர்!
நோன்பின் நேரம் அது...
நாவிற்கு நீர் தேடும் தருணம்...
ஆனால்,
இதயம் மட்டும் மனிதநேயத்தால் நிரம்பி,
"ஒரு உயிர் காக்கப்பட வேண்டும்!"
என்ற ஒற்றை சத்தியத்தில் நின்றது...
நொடிகளில் நிகழ்ந்தது அதிசயம்!
மின்னலாய் வெட்டிய கைகள்,
ஒரு உயிரை மட்டும் அல்ல —
இரண்டு உலகங்களை மீட்டது!
நின்ற இதயம் துடித்தது...
நின்ற நம்பிக்கை மலர்ந்தது...
ஒரு தாயின் மூச்சில்
ஒரு குடும்பத்தின் எதிர்காலம் மீண்டும் எழுந்தது!
ஒருகாலம்
"அதிக வேகம்" என குற்றம்சாட்டப்பட்ட
அதே கைகள் -
இன்று
"அதிசய வேகம்" என புகழப்படுகின்றன!
இது வெறும் அறுவைச் சிகிச்சை அல்ல...
இது -
காலம் எழுதிய கவிதை!
உண்மை பெற்ற வெற்றி!
மனிதநேயத்தின் முத்திரை!
"உயிரைக் காப்பவனே
உலகின் உயர்ந்தவன்" என்றால் —
அந்த உயரத்தில்
இன்று நிலைநிற்பவர்...
டாக்டர் ஷாஃபி!
- தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்
----------------------------------------------------


ඩොක්ටර් ශාෆි
කාලය සමහර වෙලාවට මිනිසුන්ට අභියෝග ගෙන එයි. එහෙත් ඒම කාලයම සත්යය හෙළි කරමින් යුක්තිය ස්ථාපිත කරයි. එයට හොඳ උදාහරණයක් ලෙස කුරුනෑගල රෝහලේ වෛද්ය ශාෆි ශිහාබ්දීන් මහතා දැක්විය හැක.
මෑතකදී බරපතළ තත්ත්වයකට පත්වූ මවකගේ ජීවිතය බේරා ගැනීමට ඔහු අතිවේගයෙන් සිදු කළ සැත්කමක් තීරණාත්මක විය. මවගේ හෘදය නතර වූ අවස්ථාවක, ඔහු තත්පර කිහිපයකින් ගත් නිවැරදි තීරණය මව සහ දරුවා දෙදෙනාම බේරා ගන්නට හේතු විය.
රමළාන් සමයේ උපවාසයද අත්හැර, මිනිස් ජීවිතයක් ප්රමුඛ කර ගත් ඔහුගේ කැපවීම සැබෑ මානුෂිකත්වය පෙන්වයි.
එක් කලෙක විවේචනයට ලක්වූ ඔහුගේ “වේගය”, අද ජීවිත බේරාගන්නා ශක්තියක් වී ඇත. එය කාලය විසින් ලබාදුන් යුක්තියකි.
“ජීවිතය බේරාගන්නා පුද්ගලයා ලෝකයේ උසස්ම මනුෂ්යයාය” — යන්නට සත්යයක් කරමින්, ඩොක්ටර් ශාෆි අද මානුෂිකත්වයේ උච්චයට පත්ව සිටී.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக