It It கலைமகன் ஆக்கங்கள்: ஆணாதிக்கம் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
ஆணாதிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆணாதிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 நவம்பர், 2017

பேடிகளாற்றான் பெண்ணடிமை!

(கலி விருத்தம்)
------------------------
ஆண்மையிலா ஆடவனாய் அகிலத்தில் இருந்து
அங்கையின் ஏந்தப்பால் பெண்டிரை தனியராக்கி
ஆண்களொடு கைகுலுக்கி மேனிமினிக்கித் திரிந்திட

ஆரவாரிப்ப திலேதுபயன் பெண்களுக்கடிமை கண்டீர்!

புதன், 28 நவம்பர், 2012

வலிக்கிறது எனக்கும்தான் மகளே!

 கவிதாயினி ஜன்ஸி கபூரின் 'வலிக்கிறது அப்பா!' கவிதைக்கான பதில் கவிதை....


வலிக்கிறது எனக்கும்தான் மகளே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மகளே...........................!

யாழினிலும் குழலினிலும்
அழகிய நாமம்தான்......

ஏன்மகளே....... குத்திக்காட்டுகிறாய்
தப்புமகளே.....
உனது விரக்திக்கு
நான்தான் காரணமா?

அண்டம் பிளக்கும் அணுவைவிட
அபாண்டமாய் நான் வார்த்தைகளை
உதிர்கின்றேனா?
பூச்சியங்கள் போட்டுப் பெரிதாக்கும்
உன்தாயின் உச்சரிப்புக்கள்
நீ கேட்டும்
ஆணாதிக்க வெறி என்கிறாய் என்னில்....!

உண்மைதான்
நீ சொல்வது......
எங்களால்........
உன் வாழ்வு பொய்த்துப்போனது
உண்மைதான்.....!