It கலைமகன் கவிதைகள்: வேண்டாத சாதி வேண்டாமடா!

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

வேண்டாத சாதி வேண்டாமடா!


குட்டைகளைக் கிழப்ப கட்டையர்கள்
குழப்பிவிட்டதுதான் சாதி! - அதில்நீ

மட்டியாயின் அழிந்தொழிந்தாய்
மடைமையில் மூழ்குவதே மீதி!

சாகிப் என்றும் மரைக்காயர் என்றும்
சாதிகள் சிறப்பாய்ப் பேசி - அதில்நீ
சாகியம் ராவுத்தார் என்றும்கூறி
சந்திகள் பிரிவதுபோல் பிரிவதே மீதி!

வயிற்றை வளர்த்திட செய்திட்ட ரன்று
வக்கிரமங்கள் செய்து! - அதில்நம்
மயிர்பிடுங்கி துப்பும் துலங்கச் செய்து
மடைமையில் ஆழ்ந்திட்டோம் விதி!

உனக்குள் ஆயிரம் பேர்கள் சூடிடு
உத்தமன் நீயெனக் கூறு - அதில்
ஈனச்செயலன்ன சாதியம் நீபேசி
இந்நிலத்தே போடாதே கூறு!

தெய்வத்தை நம்புவதாய்க்கூறு
தெய்வம் கோபமுறும் செயலும் செய்து
பொய்யான சாதியம் பேசிடின் உம்மை
பெருநரகே சூழ்ந்திடும் பொய்யாயின் பாரு!

நல்லவன் நானெனக் காட்டுகிறாய்
நானிலத்தை ஏமாற்றுகிறாய் - நீ
பொல்லாத சாதியம் பேசி
பைய பையவே செல்வாய் சுவர்க்கம்நீ!

மண்மீது நீ நல்லவனாயின் இன்றே
சாதிநிலை மறந்திடுவாய் - எல்லோரும்
கண்போன்றோர் என்றெண்ணி சார்ந்திடுவாய்
கலங்குவாய் நீயாயின் பாவம் நீயே!

சாதியெலாம் சாமியர்பலர் வார்த்தமை
சந்தியெலாம் பேருயர உண்டிசேர்க்க
நாதியிலா அவர்கள் வார்த்த மை
நம்புவாய் நீயாயின் பாவம் நீயே!

குருடான கண்களெலாம் ஒளிபாய்ச்சி
குவலயத்தை கைக்குள்ளே பத்திரமாய்
நேர்கொண்ட பார்வையினால் பார்த்தின்று
நல்லன தெளிவது அறியாயோ பேதைநீ?

சாகியம் பேசிடாதே மானிடாநீ
சந்தர்ப்பம் இலையென பயந்திடாதே
வேகாது இன்று சாதித்துவம் பேசின்
வெண்மனதை நீகொள்ளு - நிலமும் மகிழும்!
- -கலைமகன் பைரூஸ்

கருத்துரைகள்
குறிஞ்சி மகள் அருமை தோழரே.. மிக அருமை.
குட்டைகளைக் கிழப்ப கட்டையர்கள்

'கிழப்பி விட்டதுதான் சாதி - அதில் நீ
மட்டியாயின் அழிந்தொழிந்தாய்
மடமையில் மூழ்குவதே மீதி....'
அருமை நண்பா. 
 

2012. 10. 28 

Safran Mohamed prominent message for society,,,but the question is that how many can understand your lyrics? 2012/11/11

மக்கள் நண்பன் அருமை சேர்....சாதி பற்றி அழகாக எழுதி உள்ளீர்கள்். 2012/11/13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக