It It கலைமகன் கவிதைகள்: நவீன அந்தப்புரத்து ராணி! (நெடுங்கவிதை) Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

புதன், 22 மே, 2013

நவீன அந்தப்புரத்து ராணி! (நெடுங்கவிதை)


நவீன அந்தப்புரத்து ராணி!00000000000000000000000000000

அந்தப்புரத்தில் அன்னம்:---------------------------------

கோதண்ட மேந்துகின்ற காளையர்கள்
குவலய மெங்கும் உனைக்காணவே
வாதங்கள் பலபுரிந்து உனைப்பெறவே
வடிக்கின்றார் குருதி - அம்மைகாண்!

நீமுந்தி நான்முந்தி என்கின்றார்
நினக்காக எல்லாமுந் துறக்கின்றார்
பாமுந்துவாரும் பாடி வருகின்றார்
பாசம் யாருக்கோ பாவைசொல்லாய்!


பிராமணர்கள் பார்த்தோடி வருகின்றார்
பின்னாலே வைசியரும் ஓடிவருகின்றார்
இராமராம எனச்சொல்லி சூத்திரரும்
இசையொடு சாத்திரரும் வருகின்றார்!

எனையொத்த நடையொத்த நங்கைநீ
ஏற்றிட்டுப் பார்ப்பவர்தான் எவரோ?
நினையளந்திடவே நானின்று கூறாய்
நிலத்து உயர்சாதி ஏதென்றுரைப்பாய்!


மங்கை நல்லாள் பகர்கின்றாள்...-------------------------------------------
அன்னக் குலத்தினரசே வெண்மேகமே
அல்லலுறுகின்றாய் என்கோக்காய் நீ
முன்போ லரசிநானல்லள் நீதெளிந்திடு
முக்கியமே இலை எனக்கு சாதிக்கேடு!

தாயெனத் தாரமென சகிஎனைத்தேடும்
தயாளனை எனக்கென கொணர்வாய்
போயும்நீ சாதியர்களைக் கொணராதே
பேதையென போதையாய்க் காணாதே!

நற்சாதி யேதென்றறியாயோ நல்லனமே
நவில்கிறேன் கேள்நீ நாடோறும்
சொற்சுடராய் நலிவுற்றார் தமைத்தாங்கும்
சாத்திரத்தை சாலவுரைக்காதாரே காண்!

அன்னம் கேட்டது வினா இவ்வாறு...-------------------------------------------------
தொடரும்....

(கலைமகன் பைரூஸ் 28/04/2013 10:59)


கருத்துரை:
--------------
N.Rathna Vel
அழகு கவிதை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Kalaimahan Fairoos.

மக்கள் நண்பன்

சேர்...நான் ஏ.எல் படிக்கும் போது நிறைய செயுள்கள் படித்திருக்கிறேன்...உங்கள் இந்தக் கவிதை அந்த செய்யுள்களை விஞ்சிவிடும் அளவுக்கு வனப்பாக இருக்கிறது சேர். வாழ்த்துக்கள்.

Mohamed Ismail Umar Ali

இன்னாளிலில்லா அன்னங்கள் 
சொன்னாலும் புரியாப் பிள்ளைகள்! 
அன்னம் சொன்னமொழி விளங்கா 
அன்ன நடை மறந்த அன்னங்கள் 
,தன்னிலை மறந்து தடுமாறும் 
தானியங்கிக்காலத்தில் ,
இந்நாளில் என்னாலும் இயலும் ,
அந்நாள் போல்கவி இயற்ற என 
கோவில்லா குறைமட்டும் கொண்ட 
இந்நாட்டின் ,முடியற்ற கவிக்கோவே 
எந்நாளும் வாழிய நின் கவிக்கரங்கள்!


Mohammedilyas Mazahiri

Wow ya eppodo pirakka vendiya kavingn indru vanduttan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக