பணமுண்டு சிலரிடம் குணமுண்டு
பண்பிலை சிலரிடம் பக்குவமுண்டு
மணக்கும் மாண்பதைக்காய் அவர்
மரகதமாய்ப் பாடுவது குறையாமோ?
##########################
நவின்றிடும் சொல்லை பழித்தலாமோ?
வில்லெடுத்து தைப்பது போலும் பிறர்
வாழ்த்தீதும் தூற்றுதல் மடைமையே!
##########################
வார்த்தை மட்டுமாகா தென்றுநிதம்
வழிவர செய்தாரையும் தூற்றுதுநிலம்
ஒருவார்த்தையாலே பாரில் வீழச்செய
'ஒருவ'ரினால் ஆமோ மடைமையே!
##########################
சுந்தரத் தமிழ் மொழிகற்று நிதம்
சாந்தமாய் நற்றமிழில் யாத்திடும்பா
முந்தச் செயும் களிப்புறச் செயும்
மற்றவர் வாழ்த்து வார்த்தை மட்டுமோ?
##########################
எல்லாமும் தெரியு மென்பார்க்கு இங்கு
ஏதுதான் சீராய்த் தெரியும் என்பதுசரியே
சொல்லால் வேதனை தருவார்க்கு சதா
சொல்லாமல் வேதனை தான்வருமாமே!
##########################
பண்புடை தாதை இல்லில்லாயின் கிழத்தி
பேதையே வளர்ப்பதும் பேதையே மகவு
குற்றம் காண்பதுவே குவலயத்து ஆயின்
குற்றத்துடனே வாழ்ந்து மடிவ துண்மை!
##########################
பிறர் நெஞ்சத்து வரும் இடுக்கண்காணா
பிறரை எள்ளி நகையாடுதல் தகுமோ?
குறை காண்பதுவே நற்செயலாயின்
குணமிலா தாரின் அறியாமை ஏதென்பேன்?
##########################
பணமிலை யானாலும் பண்பட்ட பாவால்
பண்புடையார் பண்பை போற்றுதல் பண்பே
ஈனச்செயலே பிறரிதயம் புண்படச் செய்தல்
இதய சுத்தியொடு வாழ்தலே பண்பு!
##########################
-மதுராப்புர கலைமகன் பைரூஸ்
26/05/2013 11:03
நன்றி: சுடர்ஒளி 02/06/2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக