மழை
=====
சிங்களத்தில்: மஹகம சேக்கர
தமிழில்: 'கவித்தீபம்' இஸ்மாயில் எம். பைரூஸ்
=====================================
சுழல்காற்று செடிகொடிகள் வீசி
மின்னல் ஒளி பாய்ச்சி
பாரியதொரு மழைமேகம்
சற்றும் எதிர்பாராமலேயே
மழைநீரைச் சிந்தியது!
காலத்திற்குக் காலம்
தலைமுறைக்குத் தலைமுறையாக
உலகம் தோன்றிய நாள்தொட்டு
இதுவரை இலட்சக்கணக்கான
காதலர்கள் வீழ்த்திய
சுட்டெரிக்கும் கண்ணீர்த் துளிகளால்
மழைத்துளி உருவெடுத்ததாய்
எனக்குள் தோன்றியது!
2013/06/22