It It கலைமகன் கவிதைகள்: அப்பாவின் உழைப்புக்கு நிகர் யாரப்பா? Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

திங்கள், 17 ஜூன், 2013

அப்பாவின் உழைப்புக்கு நிகர் யாரப்பா?



தன் எண்ணத்து ஆசைகளை
தாரத்தில் ஆனந்தம் துள்ளியெழ
தனக்கே யுரித்தான நிலத்தினிலே
விதைத்து ஆகின்றான் தாதை!

வலியென்றும் பாராது நீள்நிலத்தில்
வந்திட்ட சிறுமுளைகள் செழித்திடவே
உழைத் துழைத்து வியர்நீர்சிந்தி
ஊதியமில்லாமல் செய்கின்றான் பணி!


களைகள் கிள்ளி யெறிந்து
காக்கின்றான் தம் முளைகள்
நாளை நாளில் சீர்பெறவே
நிலத்தில் உயர்ந்தன செய்கின்றான்!

தம் முளைக்காய் வாழ்ந்தோடாகும்
தந்தைக் கீடெங்குண்டு – காணீர்
இம்மையில் பயன்நோக்கா திருந்திட்டால்
இறைதுன்பம் வந்தணைக்கும் பாரீர்!

நிலையில் சிறிது உயர்ந்திட்டால்
நிலைதடுமாறும் பதர்களும் உளவே
தளராமல் பணிசெய்யும் தந்தை
தான்விடும் கண்ணீர் நச்சாகும்!

தந்தை தாய் அகங்குளிர
தரணியில் நல்லன செய்திடுவோம்
எந்தை யிவர் என்றுரைப்போம்!
ஏணிப்படியை என்றும் உளம்கொள்வோம்!

-‘கவித்தீபம்’ கலைமகன் பைரூஸ்16/06/2013 9:52


=================================
கருத்துரைகள் Opinions:
=================================
arumai
good luck friend

good one

தந்தை தாய் அகங்குளிர
தரணியில் நல்லன செய்திடுவோம்
எந்தை யிவர் என்றுரைப்போம்!
ஏணிப்படியை என்றும் உளம்கொள்வோம்!
அருமையான வரிகள் உள்ளத்தை தடவுகின்றது தந்த்தை இல்லாத என் மனசு துடிக்கின்றது உலகில் கொடுத்து வைத்தவள் இல்லை தந்தையின் பாசத்துக்காய் நன்றி தீபம்

Kaddamaippaana Kavithai. Paaraattukal Kalaimahan Fairoos

அவன் ஆண்டவனில் பாதி 
மற்றும் அவள் பாதி 
இரு கடவுளர்களும் 
ஆசிகள் மட்டுமன்றி 
அன்பையும் பொழிந்து 
அருவ ரூப இறைவனை 
உருவ ரூபமாய் 
உணர்த்த 
மனித்தப் பிறவியும் வேண்டுவதே 
இம்மாநிலத்தே 
புண்ணிய தினமதனில் 
கவிஎழுதி தோற்றுவித்தவனை தொழுத நண்பர் 
போற்றி உன்னை நான் பாட 
தேடுகிறேன் வார்த்தைகளை.

Miga miga arpudham, matrum anandham..sathiyamana varigal.

sooooooooooooonit

 arumai anna..

அருமை!! நன்று!! வாழ்த்துக்கள்!!

மிகவும் ரசித்துப் படித்தேன். அற்புதமான வரிகளுடன் அருமைக் கவிதை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக