நேற்றிரவு தூக்கத்தில் இறந்துபோன நான்
கிழிந்த புடைவையினால் மூடிக்கொண்டு
மரணத்தை கையிலேந்திக் கொண்டுபோய்
எனது கைகளினால் மண்ணறையில் புதைத்தேன்.
அதன்பின் புதைகுழியின் பக்கம் முழந்தாழிட்டு
நானே எனது மரணத்திற்காக உரத்து அழுதேன்
எனது கண்ணீரிலிருந்து உரத்தைப் பெற்று
மண்ணறையிலிருந்து மலர்ச்செடியொன்று மேலெழுந்தது..
ஆண்டு நூறு கழிந்ததன்பின் மீண்டும் நான்
எனது மரணம் புதைக்கப்பட்ட சவக்காட்டுக்கு செல்கையில்
அந்த மலர்ச் செடியிலிருந்து வெண்ணிற ©ங்கொத்து
மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருந்தது....
ஆயினும் ©விலிருந்து வந்த நறுமணத்தை நுகர
எனக்குப் புண்ணியமில்லை - துக்கத்தோடு மடிந்த எனக்கு
நிரந்தரத் தூக்கத்தினால் நான்
புலன்கள் ஒடுக்கப்பட்டு நித்திரை செய்யப்பட்டுள்ளேன்.
சிங்களம் மூலம்: මහගම සේකර
தமிழில்: 'கவித்தீபம்' இஸ்மாயில் எம். பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக