சாதியத்திற்காய்
பெண்ணியத்திற்காய்
தனத்திற்காய்
வானளாவ குரல்கொடுக்கும்
கையாலாகாதவர்களே...!
ஒவ்வொரு விநாடியும்
பர்மிய
இஸ்லாமிய
குழந்தை மலர்கள்
பௌத்தக் கழுகுகளால்
சுட்டுப் பொசுக்கி
தரைமட்டமாக்கப்பட வேண்டிய
காடையர்களால்
கருவழிக்கப்படுகின்றன....
ஒவ்வொரு மணித்தியாலமும்
கண்ணகிகள் பலரும்
கற்பு சூரையாடப்பட்டு
தீயில் வீசியெறிக்கப்படுகின்றனர்...
முஸ்லிம்கள் என்ற
ஒரே பெயர் சுமந்ததால்
அவர்களின் மண்டையோடுகள்
இரண்டாகப் பிளக்கப்பட்டு
அவர்களின்
அவ்ராத்துக்கள் கிழிக்கப்பட்டு
இரத்தம் வடிகட்டப்படுகின்றன...
ஜாஹிலிய்ய இரத்தப்பசிபிடித்த
ஓநாய்கள்
அவற்றைத் தம்மேனிகளில்பூசி
இன்புறுகின்றன...”
நீங்கள் செய்தது என்ன?
சாதித்ததுதான் என்ன?
தூதுவரலாயத்தை
முற்றுகையிட்டால் மட்டும்
முற்றுகையிட்டால் மட்டும்
பர்மிய தாதாக்களின்
குரல்வளை நசுக்கப்படுமா என்ன?
குடிக்க ஒருதுளி நீரின்றி
பர்மிய உம்மத்
தங்களது மூத்திரத்தையே
குடிநீராக்கிக் கொள்கின்றனர்...
போதாக் குறைக்கு
அதைப் பங்குபோட அவர்கள்
தங்களுக்குள் போர் செய்கின்றனர்...
பிர்அவ்னிலும் கேடுகெட்ட
அசின்விராதுவின் அடாவடித்தனம்
அரங்கேறிவருவதை
பேச்சில் வீரர்கள் நீங்கள்
வானளாவ பேச வேண்டாமா?
பர்மிய அரசை வேட்டையாட
உங்கள் கரங்கள் கழுகின்
நகங்கள்ஆக வேண்டாமா?
நீங்கள் செய்தது என்ன?
சாதித்ததுதான் என்ன?
தூதுவரலாயத்தை
முற்றுகையிட்டால் மட்டும்
முற்றுகையிட்டால் மட்டும்
பர்மிய தாதாக்களின்
குரல்வளை நசுக்கப்படுமா என்ன?
ஏ பெருச்சாளிகளே...!
இஸ்லாமிய உம்மா
இம்சிக்கப்பட்டு
உடல் பொருள் ஆவி
காவிகளால் காவப்பட்டு
உளத்திற்கு நோவினை
தருவதை என்னால்
கவிதையாகத்தான்
வடிக்கமுடியும்....
படங்களைப் பார்க்கும்போது
எனது ஆத்மா அல்லலுறுகின்றது...
நான் உளத்தால் காவிகளுக்காக
இறைவனிடம் மன்றாடுகிறேன்...
உங்கள் ஊடகங்கள்... பேச்சுச்சட்டிகள்
பர்மிய உம்மத்தின் நலனுக்காய்
அடக்கி வாசிக்கப்படுவதாய்
உணர்கின்றேன் நான்...!
உங்கள் பணப்பெட்டிகள்
அழிந்துவிடும் என்று சிந்தனையோ?
ஏ மொழியியலாளர்களே...
மீண்டும் ஒரு நிமிடம் அழிகிறது
பல வாலிபர்கள் வாள்களுக்குள்
இரையாகின்றனர்...
முதுகள் கிழிக்கப்பட்டு
வயிர்கள் ஆழக்கிழிக்கப்படுகின்றன...
குடல்கள் இழுக்கப்படுகின்றன...
இதயங்கள் சப்பித் துப்பப்படுகின்றன...
கன்னியே ஆகாத எம்குழந்தைகளின்
கன்னித் திரைகள் கிழிக்கப்படுகின்றன
காமுகத் துறவிகளால்....!
இன்னொரு நிமிடம்
கடலுக்குள் ஆட்டம் காண்பர்களில்
பலரும் பாராத உலகம் என்று
கண்ணீர் மல்கியே
கடலுக்குள் வீழ்கின்றனர்...
ஞானமில்லாத ஞானசாரன்
இலங்கையில் இக்கணம்
இழுத்துவிடும் அடாவடித்தனம்
போதாக் குறைக்கு
பர்மியத்தில்
அசினின் பிசினான மதவாதத்தால்
பல்லுயிர்கள்
உயிரோடு எரிக்கப்படுகின்றன...
நாழிகைகள் ஒவ்வொன்றும்
பலநூறு முஸ்லிம் ஆத்மாக்கள்
நிம்மதியில்லாது
தீமூச்சு விடுகின்றன....
பிர்அவ்னை பெருநதியின்
ஆழத்தில் வீழ்த்தி
அகிலத்தார்க்கு ஆதர்ஷமாக்கிய
அல்லாஹ்!
அசினின் அடாவடித்தனத்திற்கும்
கூடவே
ஞானமில்லாத ஞானசாரத்தின்
தீக்குணத்திற்கும்
பாரிய தண்டனை வழங்க
நாங்கள் ஏந்துகிறோம் கைகள்!
நிர்வாண நடிகைகளை
அவர்களின் அந்தரங்களை
சமூகத்திற்கு விலைபேசி
இலாபமீட்டும் ஊடகங்களே
உங்கள் ஊடக தர்மந்தான் என்ன?
பர்மிய முஸ்லிம்கள்
உங்களுக்கும் எதிரிகள்தானா என்ன?
இல்லை
உலகளாவிய முஸ்லிம்கள்
உங்கள் எதிரிகளா?
நாம் முஸ்லிம் நாடுகள் என்று
வானளாவ பேசும்
மனிதமில்லா பெருநாடுகளே
பேரளவில்தான் நீங்கள்
பெருநாடுகள்
நீங்கள் பணப்பேய்கள்
பெருச்சாளிகள்
உங்களிடம் மனிதம்
கடுகளவேனும் இல்லை...
உங்களிடம் மனிதம்
இருக்குமானால்
அடுத்த கடிகார முள் நகரமுன்னே
உங்கள் நாட்டில் ஒருசிலரையேனும்
குடியமர்த்துங்களேன்....
வேண்டாம்
அவர்களை கூலியாட்களாய்
கொண்டு உங்கள் நாட்டில்
வேலை வாங்குங்கள்...
அவர்களின் மௌத்து
உங்கள் நாட்டில் நிகழட்டும்....
ஒரு போத்தல் தண்ணீர் மட்டும்
அவர்களுக்குக் கொடுத்து
கரைசேர்த்துவிடுங்கள்...
அயல்வீட்டான் பசித்திருக்க
தான் மட்டும் புசிப்பவன்
நிலை பற்றி
நபிகள்நாதர் சொன்னவை
உங்கள் செவிப்பறைகளில்
வீழவில்லை போலும்....!
இன்னுமொரு முள்
நகரப் போகிறது...
இறைவனிடம் உங்கள் கரங்கள்
வானளாவட்டும்...
“ஏ இறைவா!
பர்மிய உம்மத்தை
நீ காத்து
துர்நாற்றம் வீசும்
காமுகர்கூட்டத்தின்
மண்டைகளை சீர்செய்துவிடு
இன்றேல்
பூண்டோடு அழித்திடு” என்று...
-கலைமகன் பைரூஸ்
30.05.2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக