----------------------------------
பேருற்றேன் யான்!
----------------------------------
புரட்டாதி
முதலாந் தேதி யீதில்
புகழ்ந்திட
யாருளர் நினைத் தேன்
உரமது
தமிழின் காப்பியம் சீராய்
உவந்
தளித்தோன் ஜின்னாஹ் தானே!
பெருங்
காப்பியம் ஐந்தும் ஐவர்
புகழ்
பெற தந்தார் புவியீதில் சீராய்
பெரும்
புலவன் ஜின்னாஹ் தானும்
பெருமையாய்(த்) தந்தான் பன்னூல் தானே!
பெருமை
யிலா(ப்) பெரும் புலவன்
பேசுவர்
பண்பாய் தினமும் தமிழே
கருதுவர்
கருத்தில் உயர் தமிழே
காசினி
யிலுயர் செம்மொழி யென்றே!
பேருற்றேன்
யானும் என்னாசான் என்பதில்
பெருமை
யெனக்கு காப்பியக் கோவெனில்
பேருயர்
தமிழ்தான் தருவது உன்னி
புகழ்ந்தேன்
என்றும் அவர் பூக்க!
-கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக