It கலைமகன் கவிதைகள்: ஏன் காதல் கூடாது? - கலைமகன் பைரூஸ்

திங்கள், 7 செப்டம்பர், 2015

ஏன் காதல் கூடாது? - கலைமகன் பைரூஸ்

------------------------------------
ஏன் காதல் கூடாது?
------------------------------------
ஏன் காதல் கூடாது…?
ஏன் காதல் கூடாது?
உன்னை ஏன் நீ காதலிக்க்க் கூடாது?
உன் மனதை ஏன் காதலிக்கக் கூடாது..?
உனக்கு மகிழ்வூட்டுவாரை ஏன் நீ
காதலிக்க்க் கூடாது?


குறுஞ்செய்தி அனுப்பி
வாய்க்குச் சுவையானவை வழங்கி
பிறந்தநாளன்று அட்டையனுப்பி
தனியாக சந்தித்துத்தான் நீ
காதலிக்க வேண்டுமா என்ன?

காதலிப்பதில் ஏது தப்பு நீ செப்பு?
காதலித்தால் சங்கு என்று நீ
எப்படிச் சொல்லலாம்?
திருமணம் செய்தால் நீ
சவக்காடு என்று எப்படிச் சொல்லலாம்?
வாழ்வதற்குத்தான் உடம்பு
வாழ்வதற்குத்தான் உயிர்
வாழப் பழகு… பயம் ஏன் வாழ்வில்…!

திருமணம் செய்து காதலி
வாழ்க்கைத் துணையைக் காதலி
வாழ்வியலைக் காதலி
வாழ்வு சிறந்திடச் செயும் மறையை
நீ நன்றாய்க் காதலி… காதலி…!!

மாற்று மதத்தவனைக் காதலி
அவன் நற்குணங்களைக் காதலி!

எல்லாவற்றிலும் மேலாய் உன்னை
இருட்டறைக்குள் ஈரைந்து மாதங்கள்
துன்பங்கள் சுமந்து நீ வெளிவர
நீ நடை பயில.. நீ வளம்பெற
உனைச் செய்த மாதவத்தாளைக் காதலி…

என்ன “காதல்” என்றால் பாவமா சொல் நீ?

சத்திய மறையைக் காதலி….
சமதர்மத்தைக் காதலி…. காதலி…
அல்லல் படுவாரைக் காதலி
அவன் துன்பத்தில் நீகொள் பங்கு…

என்ன “காதல்” என்றால் கசப்பா உனக்கு?

தாய்மையைக் காதலி….
பெண்மையைக் காதலி…
ஆண்மையைக் காதலி…
ஆசு களைவான் எவனோ.. எவளோ
அவனை – அவளைக் காதலி நீ

என்ன சங்கு ஊதத் தேவைதானா  
சிந்தி.. நீ சிந்து… உண்மையைச் சிந்து!

-கலைமகன் பைரூஸ்

07.09.2015 இரவு 8.10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக