காதல் கொண்டேன் உன்னில்
கிள்ளை மொழி பேசி
கீற்றென நில் மனமே!
குவலயம் செழித்திட மனமே
கூவிடு யாமெலாம் ஒன்றென்று
கேளிர் எலோரும் என்றோது!
கைகள் பலமாய்க் கோத்து
கொக்கரிக்காது சாதி வேறென்று
கோலமிடுவோம் ஒன்றென்றே நாம்
கௌவிடுவோம் தூய சிந்தையுளத்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக