உழைப்பாளிகளால் கட்டப்பட்ட
தோரணங்களுடன் கூடிய
பெரிய மேடை அது...
வயிறு ஊதிய பெரிசுகள்
வயிறு கிழியக் கத்தினார்கள்
வயிற்றெரிச்சலுடன்
உழைப்பாளிகள்
ஏன்தான் வந்தோம் என்று....
அடுத்த நாள்
கழற்றியெறியப்பட்ட பந்தல்களும்
அசிங்கங்களும்
உழைப்பாளிக்கு மீண்டுமாய்
உழைக்கவே
அங்குமிங்குமாய் சிதறியிருந்தன...
-கலைமகன் பைரூஸ்
01.05.2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக