வெண்ணிலவே
நீ வாழ்வியல் பாட்டு!
-------------------------------------------------------------------
எம்முள்ளம்
மகிழ்வதற்கோர் எழிலொரு தோற்றம்
எமையெலாம்
சுவீகரிக்குமோர் ஒளிச் செவ்வட்டம்
இம்மையினின்
ஈடில்லை இந்நிலவிற் கேதும்
ஈகையதாய்
ஒளிமல்கும் நீலத்துகில் தன்னில்
வீம்பில்லா
தையலவள் வானமகள் பொட்டு
வியக்கின்றேன்
தேய்ந்தெழும் வாழ்வியல் பாட்டு!
-கலைமகன்
பைரூஸ்
15.11.2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக