நீள்கரு முகிலன்ன சிகையொடு ஒருவன்
நில்லாது தள்ளாடி வரக்கண்டேன் அவன்
நீள்புருவங்க ளுயர்த்தி கடுக்கண் ணிட்டு
நிலத்தினில் பேதையாய் வரக் கண்டேன்
கண்டேன் அவனாணோ இலை பேதையோ
கருத்தினி லுன்ன வியலவிலை போயும்
கண்களை அகலத்திறந்து நோக்கிடவே ஐயோ
கோலம்செய் யவன் பேடியே என்றுன்னினேன்
உன்னியவை யாவும் உண்மையிலை என்று
உரசியுரசி வரக்கண்டேன் தாள்களில்மெட்டி
மின்னமின்ன அப்பேதையவன் ஜாடைஐயோ
மனதிற்குள் ஐயந்தந்தது பாரிதுவாவென்றே
பாரிதுவாவென்றே பாவடித்திட்டாலும் நான்
பாரினி லுலாவரும் கன்னியரன்ன ஆடவர்
நேரிலாதன புரிந்து வந்திடவே பாலினம்
பெருமை யிழந்து விகாரமாயிடுமே ஐயோ!
(கலைமகன் பைரூஸ்) 08.12.2016
நில்லாது தள்ளாடி வரக்கண்டேன் அவன்
நீள்புருவங்க ளுயர்த்தி கடுக்கண் ணிட்டு
நிலத்தினில் பேதையாய் வரக் கண்டேன்
கண்டேன் அவனாணோ இலை பேதையோ
கருத்தினி லுன்ன வியலவிலை போயும்
கண்களை அகலத்திறந்து நோக்கிடவே ஐயோ
கோலம்செய் யவன் பேடியே என்றுன்னினேன்
உன்னியவை யாவும் உண்மையிலை என்று
உரசியுரசி வரக்கண்டேன் தாள்களில்மெட்டி
மின்னமின்ன அப்பேதையவன் ஜாடைஐயோ
மனதிற்குள் ஐயந்தந்தது பாரிதுவாவென்றே
பாரிதுவாவென்றே பாவடித்திட்டாலும் நான்
பாரினி லுலாவரும் கன்னியரன்ன ஆடவர்
நேரிலாதன புரிந்து வந்திடவே பாலினம்
பெருமை யிழந்து விகாரமாயிடுமே ஐயோ!
(கலைமகன் பைரூஸ்) 08.12.2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக