மீத்தொட்டுமுல்ல மந்திரிமார் கண்களுக்குள் இல்ல செத்தொழியக்கொல்ல மந்திரிமார் கண்களுக்குள் உள்ள வித்தையைக் காணக்கொல்ல விசிரியடிக்க இப்போ இல்ல சொத்தியான ஒரு வெங்காயத் துண்டும்!
ஹெலியும் வருகுது நம்ம ஆட்களும் வார்ராங்க இரசம் இல்லா காய்ச்சல் கூரும் வருகுது செத்தவங்களுக்கு ஆயிரங்கள் வீசுராங்க... செத்தவங்க வாய்திறக்க மாட்டாங்க... ராசாமார் மாறிமாறி வாராங்க... பத்துகத ருசியாகச் சொல்லுறாங்க - நம்மவங்க ஊர்ந்துதான் பாக்கிறாங்க கசப்பில்லாம உண்மையில வந்தவின இதனால தானுங்க... நாற்றந்தான் நாளும் வருகுது குப்பையினின்று நுளம்புகள் தொல்லை வருகுது இன்னுந்தானிங்கு சுற்றியின்று நீலிக்கண்ணீர் வடிக்கிறவங்க -அன்று சுற்றிமதில் போடாததேனோ மதில் போடாததேனோ? விதியிதுதான் என்று சொல்லிச்சொல்லி காலம்போச்சி கதிவருமுன் செய்யவில்லை நாமுந்தான் இப்போபோச்சி விதியிதனிலேனும் படிப்போம் பாடம் நாமுந்தான் விடிவில்லை இல்லையெனில் ஒருபோதும் நமக்குந்தான்! -கலைமகன் பைரூஸ் 15.04.2017
இதனை யூரியுப்பிலும் காணலாம்.
பதிலளிநீக்கு