It It கலைமகன் கவிதைகள்: தாய்மொழி படும்பாடு பார்! Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

திங்கள், 3 ஏப்ரல், 2017

தாய்மொழி படும்பாடு பார்!

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் யாப்பியலை “காப்பியக்கோ” ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் ஆசானிடம் சற்றுக் கற்றேன்.

எனதாசான் கலாபுஷணம், சைவப் புலவர் சு. செல்லத்துரையும் ஆதரவு தருகிறார்.

புலவர் குழந்தையின் “யாப்பிலக்கணம்” நூலையும் கற்றுவருகிறேன்.

கற்றதை  வெளிக்கொணர “பயிற்சிகளை” மேற்கொள்கிறேன்.


பிழைகள் பொறுத்து தெளிவுறுத்துவது சான்றோர் பணி!

-தமிழன்புடன்,

கலைமகன் பைரூஸ்


(1) கலி விருத்தம்
----------------------------

நன்மை செய்திட கடையனெனப் பேர்
--------------------------------------------------------
நன்மை பெற்றிட நாளும் நானுந்தான்
நல்லன வாற்றி னேனே பலர்க்கும்
நன்மை யலவே கிடைத்த தென்க்கு
நாயினும் கடைய னென பேரெனக்கே!

-----

தாய்மொழி படும்பாடு பார்!
--------------------------------------------------------
தாய்ப்பா லன்ன தனித் தமிழ்மொழி
தப்பாய்க் கவிகள் கரங்கட் கேறவே
நாய்ப்பா லன்ன நாமந் தாங்கி
நானிலத் தினின் நாறுது சிலவிடம்!

03.04.2017



(2) ஆசிரியத்துறை
----------------------------

வாய்ப்பு வருங்கால் காத்திருத்தல்
-------------------------------------------------------------
பாய்கின் றபுலி யெலாம் பதுங்கியே புதர்க்குள்
படுத்திருப் பதெலாம் பயந்தாங் கொளி யென்பதற்கா
வாய்புதைத் தேயிருப் போரெ லாம்மூ டரன்று
வாய்ப்பு வருங்கால் அடங்கி யிருக்கும் வல்லோரே!

08.04.2017



(3) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
----------------------------------------------------------------------------

(1) நாயினும் கடையன்!
-------------------------------------
அருமறை தந்தவன் அற்புதங் களெத் துணை யெத்துணை
அகத்தினிற் கொண்டிட ஆனந்தக் களிப்பே இக்கண மீதும்
பெருமை யளித்தான் மனிதனாய் பிறக்கச் செய்தே தரையில்
புகழை மீட்டாதோன் நன்றி கொன்றவன் நாயிலும் கடையன்!

09.04.2017

(2) எட்டப்பர்
----------------
தொழும்பரெலாம் துன்புற்றிருக்க தொழுகள்ளர் தொந்தியுடனே தந்திமீட்டி சாதித்திடுவர்
எழும்பவிய லாதேங்கி எட்டப்பரை எதிர்க்கவியலாது ஏனிப்பிறப் பென்றிடுவர்
குழுக்களா யமர்ந்து சிந்தித்தாலும் கண்டபேறு குவலயத்தி லேதுமிலை
தொழுகை தடியர்க்கே யென்று தம்மேழ்மையி ற்றம்மை யேதூற்றுவர்

09.04.2017

(3) புத்தாண்டில் திடம் கொள்வோம்!
---------------------------------------------------------------
பூத்திட்ட புத்தாண்டீதில் பண்புகள் பலவும் அகத்துடனே இணைய
மத்தள மோங்கியறைக மடைமை மண்ணினின் முழுதும் மறைய
வித்தக மெங்கும் வரிசையாய் மணங்கமழ வனிதையர் மானம்காக்க
மணங்கமழ் வண்ணத் தமிழினி மாட்சிமைமிகு கலைபல வளர்ப்போம்!

-கலைமகன் பைரூஸ்
14.04.2017



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக