நல்லபல கவிகள் நெய்தே - அவை
நானிலத்தில் வாழ்ந்திடச் செய்தீரையா!
சொல்லுங்கள் பாரதி - உமைப்
போலக்கவி நெய்தவருண்டா ?
இளமையில் கவிபுனைந்தவருண்டா?
தவறுகள் கண்டு கரங்கள் கட்டிநின்றார் பதியில்
தட்டியெழுப்பி வீறுகொண்டிடச் செய்தனை
துணிந்தே எழுந்தீர் தகையிலாதாரை
பணிந்திட பண்பாயும் அக்கினியாய் எழுந்தும்
உம்படைப்பாயுதங்களால் நிமிர்த்தினீரையா!
நானிலத்தில் வாழ்ந்திடச் செய்தீரையா!
சொல்லுங்கள் பாரதி - உமைப்
போலக்கவி நெய்தவருண்டா ?
இளமையில் கவிபுனைந்தவருண்டா?
தவறுகள் கண்டு கரங்கள் கட்டிநின்றார் பதியில்
தட்டியெழுப்பி வீறுகொண்டிடச் செய்தனை
துணிந்தே எழுந்தீர் தகையிலாதாரை
பணிந்திட பண்பாயும் அக்கினியாய் எழுந்தும்
உம்படைப்பாயுதங்களால் நிமிர்த்தினீரையா!
விசையுறு கவிகள் செய்தீரையா - பாரதிநீரே
விலங்கிடப்பட்ட மாதர்க்கு விடுதலையும்
நாதியற்றோர் எழுந்திட ஏற்றமாய்பலவும்
தெய்வத்தின்மீது மக்கள் பற்றுவைத்திடவும்
குழந்தைத் திருமணம் ஒழிந்திடவும் அஃதன்ன
பெண்கள் வித்தைபல கற்றிட ஆடவர்க்கு
சரிநிகர்சமமென பெண்கள் எழுவதற்கும்
தட்டிய உம்பறைபோல முரசம் யாரிடமுண்டு?
விலங்கிடப்பட்ட மாதர்க்கு விடுதலையும்
நாதியற்றோர் எழுந்திட ஏற்றமாய்பலவும்
தெய்வத்தின்மீது மக்கள் பற்றுவைத்திடவும்
குழந்தைத் திருமணம் ஒழிந்திடவும் அஃதன்ன
பெண்கள் வித்தைபல கற்றிட ஆடவர்க்கு
சரிநிகர்சமமென பெண்கள் எழுவதற்கும்
தட்டிய உம்பறைபோல முரசம் யாரிடமுண்டு?
`````````````````````````````````````````
கவிதை எல்லோரிடத்தும் சென்றிடத்
தாங்கள் தந்த கவிதைகள் புதுக்கவிக்குழந்தைகள்தானே!
பாவை ரதியினில் சீராய் ஓட்டிய - பாரதிநீரே
சந்தமும் எளிமையும் ஜனங்கள் விரும்பிடும்
மெட்டுடை பாட்டுகள் இன்றும் வாழுதையா!
நரமாமிசவுண்ணிகள் நிறைபாரினில் இன்று
நின்றின்றிருந்தால் நீங்கள் முட்டியிருப்பீர்
நானிலத்தில் நிலைகொளாதிருக்க கவிபல நீர்
நலமாய்த்தான் புனைந்திருப்பீர்...
தமிழ்வாழுங் காலமெலாம் வாழவுள நம்கவியே
தந்தேன் கவியறியதான் உம்வழிக்கவியில் உமையே!
தாங்கள் தந்த கவிதைகள் புதுக்கவிக்குழந்தைகள்தானே!
பாவை ரதியினில் சீராய் ஓட்டிய - பாரதிநீரே
சந்தமும் எளிமையும் ஜனங்கள் விரும்பிடும்
மெட்டுடை பாட்டுகள் இன்றும் வாழுதையா!
நரமாமிசவுண்ணிகள் நிறைபாரினில் இன்று
நின்றின்றிருந்தால் நீங்கள் முட்டியிருப்பீர்
நானிலத்தில் நிலைகொளாதிருக்க கவிபல நீர்
நலமாய்த்தான் புனைந்திருப்பீர்...
தமிழ்வாழுங் காலமெலாம் வாழவுள நம்கவியே
தந்தேன் கவியறியதான் உம்வழிக்கவியில் உமையே!
`````````````````````````````````````````
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக