சில்லறைப் பிரச்சினைகள்
சிங்காரிக்கப்பட்டு
பலூனாகப் பெரிதாக்கி
சமூகத்தை விலைபேசும்
பெரும் சாரிபோலாகி
இனங்களிடையே முறுகலை
பூதாகரமாக்கியுள்ளதே...
அபாயா போல்
இழுத்துமூடி
ஒதுக்கிக் கொண்டிருந்தால்
எமக்கான உரிமையை
சரிவரவே பெற்றிருக்கலாம்...
பலூன்கள் உடைந்திருக்கும்...
சாரிகளும் சரியாய்
கச்சை மறைத்து மூடியிருக்கும்...
அபாயாக்களின் பெருமை
மெல்ல மெல்லத் தெரிந்திருக்கும்...
வெறும் வாய்க்கு வெற்றிலை
கெட்டவர்களால்
மேடையேற்றப்பட்ட சதுரங்கத்தில்
நாமெல்லாம்
பலிக்கடாக்களாய்....
இனியும் சிந்திக்காது
அவனையும் அவளையும்
இவனையும் இவளையும்
நிந்திப்பதால்
நடக்கப் போவதென்ன?
நமக்கான உரிமை
பேச்சளவில் நின்றுபிடிக்கும்....
அவ்வளவேதான்!
-கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக