நான் எதிர்பாராமலேயே அல்லாஹ் அருளால் இவ்வாண்டு, இரு விருதுகளுக்கு நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.
1. “தமிழ்ச்சுடர்” விருது - தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு.
2. “ஊடக பேனா விருது 2K18" - அல்-மீஸான் பவுண்டேஷன், ஸ்ரீலங்கா.
தெரிவுசெய்த இரு அமைப்புக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அத்தோடு, இவ்வாண்டு தினகரனில் திரு.
விசு கருணாநிதி அவர்கள் என்னைப் பற்றிய முழுப்பக்கக் கட்டுரை,
விசு கருணாநிதி அவர்கள் என்னைப் பற்றிய முழுப்பக்கக் கட்டுரை,
காத்தான்குடி பௌஸ் மௌலவி மூலமான “யார்? எவர்?” (145) அறிமுகம்.
மேலும், ஊடக - எழுத்து, சமூகப்பணிகளின் நிமித்தம் அகில இலங்கை சமாதான நீதவான் பதவிக்கான பரிந்துரை.
“புதிய குரல்” சஞ்சிகை தனது முதல் இதழிலேயே எனது கவிதையைச் சிறப்புக் கவிதையாகப் பிரசுரித்திருந்தது. அதன் ஆசிரியர் திரு. பஹத் ஏ. மஜீத் அவர்கட்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.
காலம் தாழ்த்தியேனும் (தென்னகம் - என்னகம் என்னைக் கண்டுகொள்ளாதபோதும்) என்னைக் கண்டு, எனை மெச்சிப் போற்றும் நல்லிதயங்கள் இனி இமயமாய் என்னிதயத்தில் உயர்ந்துநிற்கும்.
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்-ஹம்துலில்லாஹ்.
(பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து” என்ற குறளை நானும் அறிவேன். தயவுசெய்து இப்பதிவை அதன்பால் கொள்ளாதீர்கள். என்மீது அன்பு வைத்தவர்களை நினைக்கவே இப்பதிவு.)
இப்பதிவு தொடர்பிலான முகநூல் கருத்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக