அடிமன தினாழத் தினினெனை வாட்டியே
அடிபடர்ந் திடுபா செனவிருந் ததேயடி
கடினமாய் பேரிடியாய் அறைந்திடு கன்னத்தடி
காதினினென் னொலியினின் குறைதந்த தேயாசான்!
தட்டித் தந்திடா தூரினின் தமிழெனை
தகைசால் ஆளுமை யாக்கிட உன்னினன்
கட்டியே கரங்களை நின்றனன் தமிழினின்
கனிமொழி தந்தனர் புலவோர் பண்டிதரே!
எய்தவ னிருந்திட அம்பை நொந்தனர்
எந்தன் செவிப்பறை குறைத்த தொலியினை
நெய்தவ னவனிடம் குறையைப் பகர்ந்தனன்
நேசங் கொண்டவன் கனித்தமிழ் தந்தனன்
புலவோர் பலரும் பகர்ந்தனர் புகழ்மொழி
புகழே நீண்டது என்பதி உயர்ந்தது
நிலனே வாழ்ந்திட செய்தனன் என்மொழி
நாளுமுயர்ந் திடுமென் பெயர்தான் சொலுமே!
காப்பியம்
பலவும் சீராய்க் கற்றனன்
காண்டிகை யுரையும் சீராய் ஏற்றனன்
வாய்ப்பியம் யானும் யாப்பினி னெழுதினன்
வாழ்த்தியே போற்றினர் தகைசால் தமிழோர்!
பிறர்தரு மொழிசெவி வீழ்ந்திடா பொழுதினின்
பண்ணவ னிடம்யான் அழுதே பகர்ந்தனன்
பிறரெனை ஏத்திட உளத்தினின் தமிழ்கொடு
பிஞ்சும னமென்றும் நீகொடு தமிழ்கொடு!
நிறமுனில் வேறிலை செய்திடு நல்லறம்
நிறைவே தந்திடும் நீயறை அவர்மனம்!
அறியா வுளத்தினின் அருளிடு ஒருக்கால்
அடியே னழுதிட அவர்பால் முன்னே!
--
-கலைமகன் பைரூஸ்
10.10.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக