It It கலைமகன் கவிதைகள்: துயரி லாழ்த்திச் சென்றது வெண்கலக்குரல்! Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

செவ்வாய், 21 ஜனவரி, 2020

துயரி லாழ்த்திச் சென்றது வெண்கலக்குரல்!

ஆழ்ந்த கலைகளை ஆழமாய்க் கற்றிட்டார்
அன்பொ டவற்றை யகங்களுள் விதைத்திட்டார்
ஆழ்ந்து இறையில் பக்திமிகக் கொண்டிட்டார்
ஆண்டவன் சந்நிதி யினிலின்று சேர்ந்திட்டார்

வாழ்ந்து வரலாறுதான் வைத்துச் சென்றிட்டார்
வானமன்ன மக்கள் மனதினிற் றேர்ந்திட்டார்
சூழ்ந்து மாணாக் கருட்டந்தை யாய்நின்றார்
சுவனத்து நல்மணங் கமழவே சென்றிட்டார்


கசடறக் கல்விகற்றே மாணாக்கர்க் கூற்றிட்டார்
கமழ்ந்தது அவரால் அறிவுக் களஞ்சியந்தான்
நேசம்மிகுந் ததவர்வெண் குரலாற்றான் -போனார்
நோபலதந் தெமைவாட்டி நற்சுவர்க்கம் தனிற்றான்!

தட்டிக் கொடுப்பதில் தயாள குணத்தினிற்றான்
தகைமிக்க மாமேரா யவரைத்தான் கண்டிட்டேன்
எட்டியே நிற்பார் பல்லோரில் குரலினாற்றான்
என்பாய் பலருள் இருந்தின்று சென்றார்தான்!

தேன்தான் நயம்பட வுரைத்திடும் சொற்கள்தான்
தெவிட்டாக் கனிதான் அவரறிவுக் களஞ்சியந்தான்
பன்னவன் அருள்மிக நாளும் பெற்றிடத்தான்
பணிந்தே நடந்தார் கொடுத்திடிறை சுவனந்தான்

ஏயாரெம் என்றாலே ஜிஃப்ரி ஆசானேதான்
ஏற்றம் பலபெற்றாலும் எடுப்பா யில்லைதான்
நேயர்கட்குள் கவலைகள் அள்ளிச் சொரிந்தேதான்
நாடியவன் வேண்டற்கு போய்விட்டார் கவலைதான்!

ஏற்றம் கண்டார் ஏணியைத்தான் மறக்கார்
ஏராளமாய் வந்த சனந்தான் அதுவுரைத்தார்
ஏற்றியே நிற்கும் எக்கணமும் நகையேதான்
ஏகனே நற்சுவர்க்கம் நல்கிடு ஜிஃப்ரியாசான்கு!

-மதுராப்புர, கலைமகன் பைரூஸ்
21.01.2020


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக