கவிதைக்கு சொல்லழகு போல்
பூவிற்கு இதழழகு போல்
வதனத்திற்கு சிரிப்பழகு போல்
உலகிற்கு பெண்மை அழகம்மா...
உலகம் பிறந்தது பெண்மையால்
சமூகம் வளர்ந்தது பெண்மையால்
அழகும் நிறைந்தது பெண்மையால்
அமைதி திகழ்ந்தது பெண்மையால்
மலரும் வெட்கத்தில் தலைகுனியும்
மதியும் சோர்ந்து ஒளியிழக்கும்
கதிரவனும் வானில் உயிரிழக்கும்
அவளழகை இரசித்து மதிமயங்கும்
உன்னை ஈன்றெடுத்த தாயவள்
உன்னை காக்கும் தெய்வமவள்
காதல் செய்யும் காதலியவள்
ஆசையை தீர்க்கும் துணைவியவள்
பெண் என்றால் கோழையாம்
பெண் பிறத்தல் பாவமாம்
பெண் இல்லையேல் அகிலமுமில்லையென
பெண்ணே! நீ சொல்
ஆண் வீரனாக போற்றப்பட
பெண் கோழையாக தூற்றப்படுகிறாள்
ஆண் வெண்புறாவாக பறக்கிறான்
பெண்ணோ பைங்கிளியாக அடைக்கப்படுகிறாள்
பிறந்த வீட்டிலிருந்து விடைபெறுகிறாள்
வலிகளை நெஞ்சில் சுமந்து
கணவன் ஆணென நிரூபிக்கிறாள்
குழந்தையை கருவில் சுமந்து
பெண்ணை ஒரு ஜடமாக
பெண்ணை ஒரு அடிமையாக
நோக்கும் இன்றைய சமூகம்
அவளை மதிக்கவில்லை ஏனோ?
பெண்ணே! நீ தளர்ந்திடாதே!
உன்னை மதிக்காத உலகம்
நாளை உனக்காக எழும்
நீ துணிந்து போராடு
-கலைநிலா அப்ரா, மதுராப்புர
பூவிற்கு இதழழகு போல்
வதனத்திற்கு சிரிப்பழகு போல்
உலகிற்கு பெண்மை அழகம்மா...
உலகம் பிறந்தது பெண்மையால்
சமூகம் வளர்ந்தது பெண்மையால்
அழகும் நிறைந்தது பெண்மையால்
அமைதி திகழ்ந்தது பெண்மையால்
மலரும் வெட்கத்தில் தலைகுனியும்
மதியும் சோர்ந்து ஒளியிழக்கும்
கதிரவனும் வானில் உயிரிழக்கும்
அவளழகை இரசித்து மதிமயங்கும்
உன்னை ஈன்றெடுத்த தாயவள்
உன்னை காக்கும் தெய்வமவள்
காதல் செய்யும் காதலியவள்
ஆசையை தீர்க்கும் துணைவியவள்
பெண் என்றால் கோழையாம்
பெண் பிறத்தல் பாவமாம்
பெண் இல்லையேல் அகிலமுமில்லையென
பெண்ணே! நீ சொல்
ஆண் வீரனாக போற்றப்பட
பெண் கோழையாக தூற்றப்படுகிறாள்
ஆண் வெண்புறாவாக பறக்கிறான்
பெண்ணோ பைங்கிளியாக அடைக்கப்படுகிறாள்
பிறந்த வீட்டிலிருந்து விடைபெறுகிறாள்
வலிகளை நெஞ்சில் சுமந்து
கணவன் ஆணென நிரூபிக்கிறாள்
குழந்தையை கருவில் சுமந்து
பெண்ணை ஒரு ஜடமாக
பெண்ணை ஒரு அடிமையாக
நோக்கும் இன்றைய சமூகம்
அவளை மதிக்கவில்லை ஏனோ?
பெண்ணே! நீ தளர்ந்திடாதே!
உன்னை மதிக்காத உலகம்
நாளை உனக்காக எழும்
நீ துணிந்து போராடு
-கலைநிலா அப்ரா, மதுராப்புர
YouTube Channel: Thamilsh Shudar
Please Subscribe, Like and Share My YouTube Channel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக