பேரிறையே புகழனைத்தும் உனக்கே!நாளுக்கு நாள் மின்னிப் பிரகாசிக்கும், 67 ஆண்டுகளைக் கடந்த ஹொரவப்பொத்தான - (அங்குநொச்சிய) அல்-மாஸ் மகா வித்தியாலயத்தின் பாடசாலைப் பண்ணை எழுதக்கிடைத்தமை பெரும் பேறே...
-------------------------------------------------------
அல்-மாஸ் பாடசாலைப் பண்
-------------------------------------------------------
விடிவினை அகமதில் தந்தருள்பவனே
கல்பினில் உனையே வைத்தோம்
கருணை மழையே பொழிவாய்! //
குறையிலா மதியினைப் போலே
குணமாய் மாணவர் நாமே - இறைவா...
மறையொளி யினில் தினமே
மாண்பாய்க் கற்றிட அருள்வாய்
விண்ணையும் மண்ணையும்
படைத்தாள்பவனே
விடிவினை அகமதில் தந்தருள்பவனே
கல்பினில் உனையே வைத்தோம்
கருணை மழையே
பொழிவாய்!
குறிஞ்சியும் மருதமும் வளமே
குறைவினில் குளங்கள் மிதமே - இறைவா...
நெறியாய் அல்-மாஸ் நிதமே
நீண்டு வளர்ந்திட அருள்வாய்! //
விண்ணையும் மண்ணையும்
படைத்தாள்பவனே
விடிவினை அகமதில் தந்தருள்பவனே
கல்பினில் உனையே வைத்தோம்
கருணை மழையே பொழிவாய்!
கண்ணாய் அல்மாஸினை ஏத்தி...
கருத்தினின் சீராய் கற்க....
பண்பாய் பாரினில் வாழ...
பக்குவம் தந்திடு எம்மிறையே!
விண்ணையும் மண்ணையும்
படைத்தாள்பவனே
விடிவினை அகமதில் தந்தருள்பவனே
கல்பினில் உனையே வைத்தோம்
கருணை மழையே
பொழிவாய்!
பாடலாக்கம் - கவிஞர் கலைமகன் பைரூஸ்
2022/03/22
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக