வெற்றிடம்
ஒன்றிருக்கிறது
ஒன்றுமேயில்லாததால்
எதை வேண்டுமானாலும்
வைத்துக்கொள்ளலாம் வெற்றிடம்
ஏலவே
எதையாவது வைத்திருக்கும் இடம்
அதை மட்டும் தான் வைத்திருக்கிறது
ஒன்றுமேயில்லாத
வெற்றிடமோ
எல்லாவற்றையும் வைத்திருக்கும்
வாய்ப்பை வைத்திருக்கிறது
வெற்றிடம்
வெற்றியின் இடமாகலாம்
வெற்றிடம் எல்லாம்
வெற்றிடமும் அல்ல
பூரணம் எல்லாம்
பரிபூரணமும் அல்ல
-பஸீனா-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக